பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


உண்டு முடிந்ததும், ஸார், ஸார்!’ என்ற அபய ஒலி-ஒலம், அவர் காதில் விழுந்தது. வாசற்படியில் தலைவிரி கோலமாக ஒரு பெண் நிற்பது மின்சார ஒளியில் துலக்கமாகத் தெரிந்தது. அந்த முகம் கலவரத்தின் காரணத்தால் வெளிறியிருந்ததையும் அவர் "கவனிக்கத் தவறவில்லை. ஆனல் அந்த உருவம்-ஆம்; அவருக்கு நினைவு வந்துவிட்டது. 'பூங்கொடியா!' "ஆமாம்...” பூங்கொடியை முருகையாவுக்குத் தெரியும். அவள் பொற்கொடியாக அவர் நினைவில் பசுமை பெற்றிருப் பவள். இண்டர் எழுதிவிட்டு வந்த முருகையாவை அவர் மாமா அழைத்திருந்தார். அதற்கென அங்கே சென்ற சமயம். வழியில் கைப்பெட்டியுடன் ரஸ்தாவில் வருகையில், சந்துத் திருப்பமொன்றில் யாரோ ஒரு பெண் மருகினுள்; அதே கணத்தில் பறந்து வந்தான் ஒருவன் சைக்கிளில். எதிரே திரும்பிய பெண் அவன் கண்ணில் படவில்லை போலும். சங்கடமான நிலையை ஊகித்த முருகையா ஒடிப்போய் சைக்கிளுடன் அம் மனிதனைக் கைப்பிடியாக நிறுத்தி விட்டார். யார் பாக்கியமோ அந்தப் பெண் மயிரிழையில் தப்பி விட்டாள். தப்பிய அவள் தன் நல்ல காலத்துக்கு உடந்தையா யிருந்தவர் முருகையா என்பதை யறிந்து, நன்றி சொல்லிப் பிரிந்தாள். தான் மாமா வீடு சென்றதும் அங்கே அந்த யுவதியைப் பார்த்தார்; அவ ருக்குத் திகைப்பு மேலிட்டது. அப்புறம் அந்தப் பெண் வீட்டார் மாமா வீட்டில் ஒரு பகுதியில் வாடகைக்கு இருப்பவர்கள் என்ற செய்தி தெரிந்தது. - எண்ணிப் பத்து நாட்களே முருகையா அங்கு தங்க - நேர்ந்தது. அதற்குள் பூங்கொடியுடன் பலகாலம்