பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


பழகியது போன்ற நட்புரிமை பூண்டார். ஒருவரை ஒருவர் அறிந்தார்கள். அழகாக, அன்பாகப் பேசிக் கொண்டார்கள். மற்றப்படி கதைகளில் வருவதுபோல் அவர்கள் எவ்விதக் காதல் ஒப்பந்தமும் செய்துகொள்ள வில்லை. முருகையாவின் இதயத்திலே நீங்காத இடம் பெற்ருள் பூங்கொடி. பிறகு பிரிந்தார்கள். காலம் வளர்ந்தது. முருகையா படித்து முடிந்ததும், வேறு ஒரு தையலைக் கரம் பிடித்தார். பூங்கொடி அவர் மன அரங்கிலே அழகு காட்டாத நாளே இருக்க மாட்டாது! பூங்கொடியும் வாழ்க்கைப் பட்டுவிட்டாள் என்ற சேதி எட்டியதும் இதமாக இருந்தது அவருக்கு. 3 : 'ஐயா... முருகையாவுக்குச் சுய நினைவு வந்தது. 'பூங்கொடி, என்ன விசேஷம்? அதுவும் இந்த அகால வேளையில்!” 'ஐயா உங்களிடம்தான் தற்சமயம் என் உயிர் பிடி. பட்டிருக்கிறது. முன்னுளிலே தர்மராஜனிடம் சாவித்திரி மாங்கல்ய பிச்சைக்குத் தவங்கிடந்தாளில்லையா? அது மாதிரித்தான் நானும் இப்போது இருக்கிறேன். என் மாங்கல்யம் உங்கள் கையில் உள்ளது. இன்று நீங்கள் கைது செய்தது என் கணவரை......! குற்றத்தை. மன்னித்து, எப்படியும் நீங்கள் அவரை விடுவித்தாக வேணும். உரிமையுடன் கேட்கிறேன். .ெ க ஞ் சிக் கேட்கிறேன். இந்த வரத்தை-உதவியை-என் உயிர் உள்ளளவும் மறக்கமாட்டேன். நீங்கள் மனசு வைத்தால் முடியும். உங்களுக்கு என் போல் ஒரு தங்கையிருந்தால் உதவுவீர்களல்லவா? அதேபோல என்னைக் காப்பாற். றுங்கள் அண்ணு...' -