பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


அண்ணு' என்ற மந்திரச் சொல் அவர் உள்ளத் தைத் தொட்டது. தான் கைது செய்த அவன்”, பூங்கொடியின் புருஷன் என்பதை அறிந்ததும் அவர் மனம் துவண்டது. அவள் கூறுவதற் கிணங்க அவனே விடுதலை செய்யும் வழிகளை அலசினர். எதுவும் தோன்ற வில்லை. மேலே ரிப்போர்ட் போகாதிருப்பின் அவரால் எதுவும் செய்யக்கூடும். சட்டத்திற்குப் புறம்பாகப் புரட்டு எதுவும் செய்தால் தகriனமே தன் வேலே போய் விடுவதுடன், தானும் தண்டனை அனுபவிக்க வேண்டி நேரிடும் என்பதை அவர் அறியாதவரல்ல. அண்ணு!’ 'பூங்கொடி, உன் நிலையை உணர்கிறேன். மேல் அதிகாரிக்கு உடனே தாக்கல் போய்விட்டது. இல்லை யெனில் எதுவும் செய்யலாம். என்ருலும் என்னுல் முடிந்ததைச் செய்கிறேன். கலங்காமல் நீ போய் 611Trio* அவள் கலக்கம் நீங்கி வழி நடந்தாள்; அவர் கலங் கினர். வீதிப் புறத்து மரக்கிளேயிலிருந்து குயில் ஒன்று கூவியது; அந்தக் கீதத்தில்கூட சோகம் தொனித்தது: மறுநாள் முருகையா முயன்ருர். ஆனல் அவர் அளித்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. விசாரணை முடிந்து, அந்தக் கைதி வேலூர் ஜெயிலுக்கு அனுப்பப் பட்டான். முருகையா நெஞ்சம் துணுக்குற்ருர், தண்டனை ஆறு வருஷங்கள். அதே தொடர்பில் அவருக்கு சர்க்கிளாக’ உத்தியோக உயர்வு வந்தது. ஒருநாள் பூங்கொடியை வீடுதேடிப் பார்க்கப் போயிருந்தார் முருகையா. அப்பொழுது அவள் கருவுற்றி தி-5 -