பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


குப்பதறிந்தார். வேண்டியவற்றை சம்ரக்ஷணைக்கென வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கொஞ்சம் பணம் கொடுத்தார். எண்ணிச் சில மாதங்களுக்குள் அவள் கணவன் விடுதலே பெற்றுவிடுவான் என்று திட்டவட்ட மாகச் சொல்லித் தேற்றினர். ஆனல் பாவம், பூங் கொடியின் பார்வை எங்கேயோ அனந்தரமான சூன்யத்தை வெறித்துப் பார்த்தவாறிருந்தது. சில மாதம் சென்றதும் தன் ஆட்களே யனுப்பி, பூரண கர்ப்பிணியாக இருந்த பூங்கொடியை ஆஸ்பத் திரியில் அனுமதிக்கச் செய்தார். அழகிய ஆண் மகவு பிறந்தது. குழந்தையின் நினைவின்றி அலங்கோலமாக அலறியழும் அவளிடமிருந்து குழந்தையை வாங்கி, தானே வைத்துக் கொண்டார் அவர். w வருஷங்கள் ஓடின. குழந்தை இல்லாத அவ்வீட்டில் அந்தச் சிக குலச் சுடராக விளங்கியது. அவர் முன்னர் பூங்கொடிக்காகச் செய்திருக்க வேண்டிய-ஆளுல் தன் சக்திக்கும் அப்பாற்பட்டு செய்ய முடியாது போன-காரி யத்திற்கு நிவர்த்தியாக, குழந்தையை உருவாக்கினர் முருகையா. அதில் அவர் ஆறுதலுற்ருர், அவர் மனைவி யும் பூரித்தாள். கிள்ளே மொழி பயின்று தன்னை அப்பா என்பான் குழந்தை. நாளாவட்டத்தில் மாமா' என்று பழக்கிவிட்டார். குழந்தையின் அதிர்ஷ்ட பலம்தான் தன் மனைவி கருத்தரித்திருக்கிருள் என்று புளகித்தார் சர்க்கிள். பூங்கொடியைத் தான் வீட்டுடன் அமர்த்திக் கொள்ள மூன்று தரம் பகீரதப் பிரயத்தனம் பண்ணிப் பார்த்தும் பலன் கிட்டவில்லை. விதி' என்றிருந்தார் முருகையா. ராஜசிம்மனுக்கு அவரும் அவர் மனைவியுமே தாய் தந்தையராக விளங்கினர்கள். - . .