பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ግ5 இப்படியிருக்கையில்தான் அன்று தன் மகனை அடை யாளம் புரிந்து பார்த்துமுத்தமிட்டிருக்கிருள் பூங்கொடி. பெற்ற பாசமாயிற்றே! அதற்கு ஈடு, இணை ஏது? 3 "காம்ப் போய்விட்டு வந்ததும் முருகையா மேஜைமீதிருந்த கடிதத்தை அவசர அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். தன் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்து தாயும் சேயும் செளக்கியமெனக் கடிதம் கூறியது. தான் நினைத்த வண்ணமே பெண் பிறந் திருப்பது கண்டு அப்படியே சொக்கிவிட்டார்; எல்லாம் அம்பாள் செயல் என்று மெய்மறந்தார். அவர் வருகையை உணர்ந்த ராஜசிம்மன் ஓடிவந்து, * மாமா' என்ருன். "ராஜா, உன் வாய்க்கு ஜினிதான் போடவேண்டும். உனக்கு ஒரு பெண்டாட்டி பிறந்திருக்கு, தெரியுமா?’’ "அப்படியா மாமா? அப்படின்ன அது எனக்கே தான?” அவனே அப்படியே அணைத்து முத்தமிட்டார் முருகையா குழந்தை இன்ப அரவணைப்பில் இழைந்து அப்பொழுது ராஜசிம்மனும் தன் மகளும் காதலர் களாக மாலைமாற்றி தம்பதிகளாகும் புனித சம்பவத்தை -பல ஆண்டு பின்னேக்கி நிகழவிருக்கும் அற்புதத்தைகற்பனை செய்து பார்த்த முருகையாவிற்குச் சந்தோஷம் எல்லை மீறியது. மரக்கிளேயில் ஜோடிப் பறவை பிரேம கீதம் இசைத்தன. . -