பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10წ

  • மச்சான்! அன்னிக்குத் தெய்வம் செஞ்ச சோத னைக்கும் இன்னிக்கு நீங்க செய்யிற சோதனைக்கும் மத்தி யிலே, என் வீட்டுக்காரரோட சோதனைக்கும் நெதம் நான் ஆளாகிக்கிட்டுத்தான் வாரேன் என்கிறதை நீங்க அறிஞ்சிருக்க மாட்டீங்க! அந்த நாளையிலே நீங்க எம்மேலே கொண்டிருந்த துல்லியமான அன்புக்கு அடை யாளமாகக் கொடுத்தனுப்பின இந்தத் தாழம்பூச் சித் தாடை இந்தா எங்கையிலேயே இருக்குது; இதையாச்சும் எங்கிட்டவே எப்படியும் இருக்கிறதுக்கு நீங்க சம்மதி யுங்க. இந்தக் கடைசி ஆசைக்கு நீங்க ஒப்பலேன்னு, அப்பாலே இந்த ஏக்கத்தாலே நான் மனசு உடைஞ்சு செத்துச் சிவலோகம் போயிடுவேனுங்க! இந்தத் தாழம்பூச் சித்தாடை உங்க கண்ணுக்கு வெறும் நூல் புடவையாகப் படலாம். இதை உடுத்தின நாலேஞ்சு மாதங்களிலே கிழிஞ்சும் போயிடலாம். ஆன எனக்கு அப்படி இல்லை. இதிலே ஊடும் பாவுமா வெறும் வர்ண நூல்கள் ஒடவில்லை. நம்முடைய அன்பும் பாசமும்தான் இழைகளாக ஒடி இந்தப் புடவையாக உருவெடுத்திருக் கிறது. நீங்க பிடுங்கிக்கிட்டாக்கூட என் மனசிலே பதிஞ்சுள்ள தாழம்பூச் சித்தாடை என் உள்ளத்திலே இருக்கும். அதுக்கு அழிவில்லை!’

ஆம், பேசியவள் பாஞ்சாலி! குமரவேலன் விம்மினன்: "பாஞ்சாலி! இந்தத் தாழம்பூச் சித்தாடை எப்பவும் உன்கிட்டவே இருக் கட்டும்; அப்பத்தான் நானும் உயிர்தரிச்சிருப்பேன், பாஞ்சாலி!”