பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11& 'ஸ்ார்... ஐயா.. முதலாளி' டைரக்டரின் அழைப்புக் குரல் செல்லுபடியாகாமல் போயின. ஆகவே, அவர் படத்தயாரிப்பாளரின் தோளேத் தொட்டார்; அவ்வளவுதான்; அவர் சிலித்துக் கொண்டு எழுந்தார்; பூமியைப் பார்த்தார். நெடுமூச்சுப் புறப்பட்டது. என்னளார்: ஷாஅட்டிங் முடிஞ்சிடுச்சா?” என்று வினவினர். - நாயகமுத்து ஏற இறங்க டைரக்டரை நோக்கினர். "ஊஹாம் இல்லீங்க!” என்ற பதிலே அவர் செவிமடுக்க தவறவில்லை. அவர் எதிரே நோக்கினர். அங்கே காட்சி அரங்கம் உருவாகியிருந்தது. பால் வண்ண நிலா பவனி வராமல் பதிந்தது பதிந்தவண் னமே இருந்தது-திரையில் அல்லி கண் மலர்ந்திருந்தது; இந்த அல்லி சந்திரனே சட்டை பண்ணும் அல்லியல்ல! அருகே சுற்றிச் சுற்றி வந்தது மூசுவண்டு ஒன்று. அண்டியிருந்த இளஞ் சினிமா காதலர்களைப் பார்த்து விட்டு எடுத்தது ஒட்டம்! காதலன் ரகசியமாகப் பொடியை எடுத்தான். மிஸ்டர் நானல்லவா உங்க ளுக்குப் பொடி போடவேண்டும்?இதுதானே இன்றைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள படப்பிடிப்புக்கான சாரம்!...” என்று நைத்தியம் செய்தாள் நடிகை. நடிப்புச் சிரிப் புக்காகவாவது பதில் சிரிப்பு சிரிக்க வேண்டுமே என்ற நியதிக் கோட்பாட்டில் அவன் பற்களைக் காட்டினன் . சுறுசுறுப்பு ஓடி வந்தது. லேட் பாய் வேலையை வயதானவர்கள் ஏற்றனர். டைரக்டர் ஒருமுறை கதா நாயகன் ஆளுர்; மறு கணம், கதைநாயகியானர். அடுத்த விடிை, வில்க் ஸ்லாக்கை உதறிவிட்டபடி, வசன கர்த்தாவிடம் வசன விவாதம் புரிந்தார். பிறகு, கீழ்ச் சிப்பந்திகளை ஏவினர்; ஒளிக்கருவி கைகொடுத்தது.