பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 13 காதலனும் காதலியும் உரையாடல் நிகழ்த்தினர். தங்களே வம்புக்கு இழுப்பவர்கள் யார் என்று ஒவிய வடி விலிருந்த அல்லியும் திங்களும் உயிர்கொண்டு எழத் துடியாய்த் துடித்தன. படப்பிடிப்பு நிறைவு கண்டது. தயாரிப்பாளர் நாயகமுத்துவுக்கு அப்பொழுதுதான் சுய உணர்வு வந்தது. கதாநாயகனை நோக்கினர்; புவன நாதனின் எழிலார் முகம் அதில் தோன்றி அவரை நோக் கிற்று. கதாநாயகி பேசிள்ை. அவள் முகத்தில் மங்கள நாயகி தெரிந்தாள். அப்பா! நான் காதலிக்கும் அன்பர் பெரிய பணக்காரர் வீட்டுப்பையன் மட்டுமில்லை. அவர் படிப்பில் அசகாயகுரர், வழக்கமாக நான்தான் வகுப்பில் முதலாவதாக இருந்தேன். என்னையும் மிஞ்சி விட்டார் அவர் என் தோல்விதான் அவரது வெற் றிக்கு அடித்தளமாயிற்று. தாயில்லாப் பெண்ணுகிய என் இஷ்டத்துக்கு நீங்கள் சம்மதம் கொடுத்து எங்களை ஆசீர்வதியுங்கள், அப்பா!' என்று வாதம் புரிந்த மங்கள நாயகியின் சொற்கள் அவருள் மீளவும் எதிரொலி பரப்பின. - தாயில்லாப் பெண்!'-நாயகமுத்துவுக்கு ஒர் அரைக் கணம் உலகமே இருண்டுவிட்ட மாதிரி இருந்தது. “எனக்கு இந்தச் சம்பந்தத்தில் சிறிதும் இஷ்டம் இல்லை!...” - - . . . .” * ஆவலையும் ஆதங்கத்தையும் முன்னுேடவிட்ட வண் னம், பதிலுக்காகக் காத்திருந்த நாயம்.முத்துவின் ரகசியப் 茨。究 、 பெட்டிக்குள் மேற்படி அவசரத் தந்தி சமாதி நிலை எய்திக் கிடந்தது. அந்தத் தந்தியின் மையப் பகுதியில்