பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். தெய்வ சங்கற்பம் இது என்றேனனக்குத் தெரிகிறது. ஒட்டவேண்டிய .ெ சா ந் த ம் கொண்டவர்கள் நாம். ஆனலும், அன்று விதி நம்மை ஒட்ட வைக்க வில்லை. இன் றைக்கோ அதே விதி நம்மை ஒட்ட வைக்க முனைந்திருக்கிறது. உங்கள் குமாரன் புவன நாதனை என் மகள் நேசிக்கிருள். உங்கள் பையனின் அறையில் உமது படத்தைக் கண் டதும்தான், எனக்கு உண்மை புலப்பட்டது. நீங்கள் அன்று கண்ட நாயகமுத்துவல்ல நான்; நான் இப்போது பட்டணத்தில் ஒரு பெரும் புள்ளி. என்னுடைய கடந்த காலச் சரித்திரத்தை உதறி வீசிவிட்டு, இந்தப் புதுச் சம்பந்தத்தில் தாங்கள் மனம் விருப்பப்பட வேண்டும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அன்றைக்கு நான் உங்களைக் கெஞ்சினேன்; உங்கள் காலில் விழுந்தேன். என் தகப்பனர் பட்ட கடனுக்காக என் வீடு, மனை எல்லாவற்றையும் ஏலத்தில் எடுத்துக் கொண் டிர்கள். என்னை ஆட்டிப் படைத்த கடன் பளுவைத் தாள முடியாமல் நான் கடைசி யிலே ஐ. பி.--மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டு ஊரைப் பிரிந்தேகினேன். இந்தச் சங்கடத் தில் என் மனைவி என்னிடம் மங்களநாயகியை ஒப்படைத்துவிட்டு இறந்து மடிந்தாள். இந்த என் பழங்கால ரகசியம் என் மகளுக்குத் தெரிய லாகாது; வேறு யாருக்குமே தெரியக்கூடாது. தெரிந்தால், என்மேகளை நான் இழக்க வேண்டி வரும்; நானும் இறந்து விடுவேன். தயவு செய்து, என்னையும் என் மகளையும் காப்பாற்.