பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


'பூதலிங்கம்.’’ "யார் நாயகமுத்துவா?’’ "ஆமாம்; உங்களைப் பார்க்கிறதுக்குத்தான் உங்க. ஊருக்குப் புறப்பட்டேனுங்க.” "நான்தான் தந்தி கொடுத்துப்பிட்டேனே?” கிடைச்சுதுங்க,’’ பின்னே?’’ "உங்க காலிலே விழுந்தாச்சும், என் மகளுக்கு வாழ் வுப்பிச்சை கேட்கலாம்னு புறப்பட்டேனுங்க.' நாயக முத்து, நீ நினைக்கிறமாதிரி நான் இப்போ பணக்காரன் இல்லே; ஆண்டி! என் தொழில் முழுதும் நொடிச்சுப் போச்சு. நீஇப்போ பெரிய பணக்காரன், என் மகன் புவனநாதன் சொன்னன். நான் செஞ்ச தீவினையையும் மறந்து மன்னிச்சு, என் மகனை உன்பெண் ணுக்கு முடிக்க ஆசைப்படுகிருய் ஆலுைம், நான் உனக் குச் சமதை இல்லே, அப்பா!' என்ருர் பூதவிங்கம் கண் னிர் சொரிய. கந்தை வேஷ்டியில் ஈரம் பதிந்தது. 'பூதலிங்கம்! நீங்க கவலைப்படாதீங்க; என் சொத்து அவ்வளவும் இனி எனக்கு மட்டுமல்ல, உங்களுக்குச் சொந்தம். நான் கும்பிடுகிற முருகன்மேல் ஆணையாக சொல்கிற பேச்சு இது!...வாங்க, வீட்டுக்குப் போகலாம். காரிலே ஏறுங்க! எப்படியும், என் பழங்கால வாழ்வு என் மகளுக்கும் உங்க மகனுக்கும் எட்டாமல் செஞ்சிடுங்க. அது போதும்' என்று மன்ருடிக் கண்ணிர் பொழிந்: தார் படத் தயாரிப்பாளர் நாயகமுத்து அவர்கள். எல்லாம் மெய்தாளு?’’ - ஏன் இப்படிக் கேட்கிறீங்க, பூதலிங்கம் ஆண்ட வன் பேரிலே சத்தியம் வைச்சுச் சொன்னேனே? இன்ன் முமா உங்களுக்கு நம்பிக்கை உண்டாகலே?" -