பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. iś "நாயகமுத்து! உன்னுேட அன்பு பெரிசு. நான் உனக்குக் கெடுதி செஞ்சேன்; உன் மானத்தை வாங்கி னேன். என்னலே ஊரை விட்டும் நீ ஒடினே! உன் அன்பு ஈடில்லாததுதான். இன்னொரு உண்மையையும் உன் காதில் போட வேணும். நான் இவ்வளவு தூரம் சொன்னது அத்தனையும் பொய். உன்னுடைய உண் மையான உள்ளத்தைப் புரிஞ்சுக்கிடத்தான் உன்னை இப்படிச் சோதிச்சுப் பார்த்தேன். அதுக்குத்தான் இந்த வேஷமும் போட்டேன். நானே உன் வீட்டுக்கு வரத் தான் புறப்பட்டேன். நீயே என்னைச் சந்திச்சுக் கிட்டே! நான் செஞ்சதை மறந்திட்டே நீ. அதுவே உன் தங்க மனசுக்கு அடையாளம்’ என்று கூறிச் சிரித் தார் பூதலிங்கம். பங்களாவில் பட்டுச் சொக்காய் மிளிர, சோபாவில் வீற்றிருந்தார் பூதலிங்கம். 'அம்மா மங்களா, வந்து உன் மாமாவைக்கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்க அம்மா." என்ருர் நாயகமுத்து. அவர் மனம் முருகனை நாடி ஒடிக் கொண்டிருந்தது.