பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு ழல் டாக்டர் சுதாகரிடமிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் டைரெக்டர் சுகுமாரருக்கு மன நிம்மதியை அளித்ததா அல்லது மனக்களிப்பைத் தந்ததா என்று வகைப்படுத்த முடியாததொரு புதிராகத்தான் இருந் தது. திறந்திருந்த விழி விரிப்பின் வழியே அந்தக் கடி தத்தைப் படித்தார்.

  • அன்புடையீர்,

தங்கள் சாரதா பூரண குணம் பெற்று விட்டாள்என்பதைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இரண்டொரு நாளில் வந்து சாரதாவை அழைத்துச் செல்லுவீர்களென்றும் நம்புகிறேன். இப்படிக்கு டாக்டா சுதாகர்’ சுவர்க் கடிகாரம் ஐந்து முறை அடித்து நின்றது. அந்தி மயங்கி வந்தது; பொன் வண்ணக்கதிர்கள் பிரிவுப சாரம் பெற்ற வேளை. - சுழல் நாற்காலி டக்கென்று நின்றது; டைரெக்டர் சுகுமாரர் தம் நினைவு பெற்ருர். அன்று எடுக்கப்