பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 "அத்தான், இதுநாள் வரைக்கும் நடந்த உங்க ளுடைய மெளன நாடகம் இன்றைக்குத்தான் எனக்குப் புரிந்தது. உங்கள் மூத்தாள் சாரதா பிரிந்ததாக, அதாவது இறந்ததாக, என்னிடம் கதை சொன்னிர் கள். ஆனல் உங்கள் சாரதா சித்தப்பிரமையால் பிடிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்ததைப்பற்றி ஏனே என்னிடம் பிரஸ்தாபிக்கவே இல்லை? உண்மை வெளிப் பட்டால் ஏதாவது எதிர்பாராதது நடக்குமோ என்ரு உண்மையைப் பொய்யாக்கினர்கள்? சாரதா குணம் பெற்ற விவரத்தைச் சற்றுமுன் உங்கள் மேஜைக் கடிதங்கள் எனக்குச் சொல்லின. சாரதா கொடுத்து வைத்தவள்; உங்கள் நிழலில் ஒண்டிவிடுவாள். ராதைக் கும் சொந்த அம்மா கிடைத்துவிட்டாள். ஆனல்...” என்று மீளு விக்கலுக்கும் விம்மலுக்குமிடையே சொல்லி முடிப்பதற்குள், சுகுமாரர் அவள் நடுங்கும் கரங்களைப் பற்றிக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார்; மீன, என்னை மன்னித்துவிடு. என் மூத்த மனைவி உயிருடன், அதுவும் பைத்தியமாக இருப்பதை நீ அறிய நேர்ந்தால் ஒருவேளை அதனல் என் குழந்தையை நீ கவனிப்பதில், அன்பு பாராட்டுவதில் குறைவு ஏற்படுமோ என்று அஞ்சியேதான் சாரதாவைப்பற்றிய உண்மையை வெளி யிடவில்லை. மீளு, என்னைக் குற்றவாளி ஆக்காதே. நீ என் கரம் பற்றிய பொன்வேளை, சாரதாவும் குணம் பெற்றுவிட்டாள். எனக்கும் இன்றுதான் நல்ல மூச்சு வந்தது. இனி நீயும் சாரதாவுந்தான் என் உயிர், மீன' வழிந்த வெள்ளத்தை வழித்துவிட்டுக் கணவனே ஏறிட்டுப் பார்த்தவாறு, அத்தான், உங்கள் மனநிம்மதி தானே என் கனவு? குழந்தையின் வளந்தானே என் குறிக்கோள்? நாளேயே சாரதா அக்காவை அழைத்து.