பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வாருங்கள் வீட்டுக்கு. சாரதாவை என் கண்போலப் போஷிக்கிறேன்' என்ருள் மீன. சுகுமார் ஆனந்த உலகில் ஜிவ் வென்று பறந்து கொண்டிருந்தார். o இநீடிந்தது. மீனு குழந்தையைத் தோளில் சார்த்திக்கொண்டு. வாசலுக்கும் கடைக்குமாக நடந்துகொண்டிருந்தாள். காரை எடுத்துக்கொண்டு சாரதாவை அழைத்துவரச் சென்ற கணவர் வரும் வழிமீது கண் பதித்துக் காத்திருந். தாள் மீன. உள்ளே விருந்து தயாராகிக் கொண்டிருந் தது. சாரதாவுக்கு விருந்து வைக்க வேண்டுமல்லவா? ராதை பொங்கும் சிரிப்புடன் ஆடிப் பாடினுள். குழந் தைக்குத் தன் சொந்த அன்னையின் வரவு தெரிந்: திருக்குமோ?

பாண்டியாக் வந்தது. சுகுமாரர் சாரதாவைக் கைப்பிடியாக அழைத்துக்கொண்டு மெல்ல மெல்லப் படி, களைக் கடந்தார். -

நிலைப்படியில் குழந்தை ராதை விளையாடிக் கொண் டிருந்தது, பறக்கும் குதிரைமீது சவாரி விட்டவாறு. ராதை' என்று அன்பு வெள்ளத்தில்தோய்ந்தெடுத்த வார்த்தையினுல் தன் மகளேக் கூவி அழைத்தபடி, அப் படியே வாரி எடுத்துக் குழந்தையை உச்சி மோந்தாள்; முத்தமாரி பொழிந்தாள், சாரதா. அவள் கண்களில் ஆனந்தக் கண்ணிர் முத்துக்கள் இரண்டு டால் அடித் தன. ராதை, ராதை, என் கண்ணே உன்னை நான்