பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பிறப்பில் இப்படிக் கொஞ்சி மகிழ எத்தனையோ தவம் செய்திருக்க வேனும், கண்ணே!’ என்று சாரதாவின் உதடுகள் முணுமுணுத்தன. வெடித்தெழுந்த பெருமூச் சைப் பிளந்துகொண்டு. குழந்தை ராதை சாரதாவின் அணேப்பிலிருந்து முண்டியடித்துக்கொண்டு விடுபட்டு ஓடி வந்து மீன விடம், அம்மா, யாரு அம்மா இது? எனக்குப் பயமா இருக்கே’’ என்று அழ ஆரம்பித்தது. குழந்தையைச் சமாதானப்படுத்திப் பிஸ்கோத்துக் கொடுத்து உள்ளே விளையாடச் செய்த பின்னர் மீண்டும் ஒடி வந்தாள் மீன. வாருங்கள், அக்கா' என்று வர வேற்ருள் சாரதாவை. சாரதாவுக்குத் திக்குத் திசை மட்டுப்படவில்லை. * யார் இவள்? அக்காவாமே?” சாரதா, இவள்தான் மீளு; என் இரண்டாம் மனைவி; நம் குழந்தையைப் போவித்துக் காப்பாற்றிய புண்ணியவதி. இனி நீயும் இவளுமே என் இரு தன் கள்' என்ருர் சுகுமாரர், சாராதாவின் தலை மயிரைத் கோதி விட்டுக்கொண்டு. இவள் உங்கள் இரண்டாந் தாரமா? உங்கள் அன் புக்குப் பங்கு போட ஏற்கனவே இன்னெருத்தி இங்கே காத்திருக்கிருள் என்று தெரிந்திருந்தால் நான் இங்கே அடியெடுத்து வைத்திருக்கவே மாட்டேனே! நீங்கள் இப்படி என்னே வஞ்சிப்பீர்களென்று அறியாமல், போனேனே! இந்த நாடகத்தைக் காணத்தானு என்ஆனது குணமடையச் செய்தீர்கள்? ஐயோ தெய்வமே எண், அலறிய முழங்கிய சாரதா, மறுகணம் மூர்ச்சித்து, கீழே சாய்ந்துவிட்டாள். . - தி.-9