பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 திருமந்திரம்

'வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளே உணர் தற்கு உபாயம் மூன்று; அவை கேள்வி, விமரிசம், பாவனே என்பன . அவற்றுட் பலர்பக்கலிலும் பலகாலும் கேட்டுப் பயிறலாகிய கல்வியின் இன்றியமையாமை முன் னர் விளக்கப் பெற்றது. கல்வி கேள்விகளின் பயனுகிய ஒர்த்துணர்தலாகிய விமரிசமும் செம்பொருள் காண்டலா கிய பாவனையும் இவ்வதிகாரத்திற் கூறப்படும்.

67. தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஒதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின் ஒதியுணர்ந்தவர் ஓங்கிநின்ருரே. (301) முதற்பொருளே அறிதற்குரிய உபாயங்கள் இவையென உணர்த்துகின்றது .

(இ-ள்) தேவர்களுக்கெல்லாந் தலைவனும் ஒளிதிகழும் திருமேனியை யுடையானும் ஆகிய இறைவனே உங்களில் யாவர் ஒருவர் உள்ளவாறு அறியப்பெற்ருர்களோ அத் தன்மையராகிய நீவிர் அம்முதல்வனே உள்ளவாறு அறிந்த பின் அவனது பொருள் சேர் புகழ்நூலே ஒதுமின். அறிஞர் வாயிலாக அந்நூற் பொருளே இடைவிடாது கேட்பீராக. அதனை உள்ளத்தில் ஆராய்ந்துணர்வீராக. உணர்ந்த பின் அவ்வாறு ஒதியுணர்ந்தார் அம் மெய்ப்பொருளோடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தலால் அது அதுவாய்ப் பிரிவற்ற நிலேயில் உயர்ந்து நின்ருராவர். எ-று.

ஒதுதல் என்றது கற்றலே. கேண்மின் என்றது கேட் டலே உணர்தல் என்றது ஆராய்தலாகிய விமரிசத்தை. ஓங்கி நிற்றலாவது - மெய்ப்பொருளே இடைவிடாது ஒற் றுமையுறப் பாவித்து உயர்நிலையடைதல். ஒர்த்துள்ள முள்ளதுனரின் ஒரு தலேயாப், பேர்த்துள்ள வேண்டா பிறப்பு என்ருர் திருவள்ளுவரும்.