பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 திருமந்திரம்

வேண்டும். ஏற்பானும் தமக்குத் தானஞ் செய்வாரை அண்ணல் இவனென்றே யெண்ணி அஞ்சலியத்தகுய் ஏற்றல் வேண்டும். இங்ஙனம் சிவனருளே நினைந்து தானம் செய்யாதோனும் சிவனருளே நினைந்து தானம் பெருதோனும் ஆகிய இருவரும் நரகத்துன்பத்தை யடை வர் என்பதாம்.

தீர்த்தம்

81. உள்ளத்தி னுள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்துநின் ருடார் வினேகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே. (509) துாய்மை பெறுதற்குரிய தீர்த்தங்கள் இவையென உணர்த்துகின்றது.

(இ - ள்) அழுக்கினைப் போக்குதற்குரிய தூய நீர்நிலை யாகிய தீர்த்தங்கள் (வாய்மை, அன்பு, தவம், செபம் முதலிய நற்பண்புகளாக) நம்முள்ளத்தினுள்ளே பலவுள் ளன. இறைவன் திருவருளும் உயிரன் புமாகிய இத்தீர்த் தங்களிலே தம் வினையாகிய பாவந் தீர மெள்ள இறங்கி உட்புகுந்து திளைத்து முழுகாதாராய் கடலும் மலேயும் என எல்லாவிடங்களிலும் தீர்த்தங்களைத் தேடித் திரிவர் மெய்ப்பொருளைக் கற்றுணராத வஞ்சனேயுள்ளத் தார். எ - று.

உயிர்களின் அழுக்கை நீக்கித் தூய்மை செய்யத் தீர்த் தங்கள் உள்ளன. புறந்துய்மை நீரானமையும் அகந் தூய்மை வாய்மையாற் காணப்படும் என்பது பொது மறை. *கங்கையாடிலென்....எங்குமீச னெதைவர்க்