பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு Í 49

போல அம்முதல்வன் உள்ளத்துள்ளே கலந்து தோன்று வான் எ-று.

தாரணையில் நிறுத்தப்பட்ட உள்ளமானது ஐம்புலன் கள் அவற்ருல் எய்தும் நுகர்ச்சிகள் ஆகியவற்ருல் திரிபு அடையாமல் அவற்றைக் கடந்து மெய்ப்பொருளாகிய இறைவனுடன் ஒன்றித் தொடர்புறுதல். இதன் இயல் பினே,

'நிறுத்திய அம்மனம் நிலைதிரி யாமற்

குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவே ?

எனவரும் சிலப்பதிகார உரை மேற்கோளால் அறியலாம் , இத்தியானம் திருவருளாகிய சத்தியைத் தியானிக்கும் பரத்தியானமும் ஞான வடிவாகிய குருவைத்தியானிக்கும் சிவத்தியானமும் என இருவகையாகி யோகத்திற்கு அங்க மாகும். இவற்றுள் முன்னேயது சகளத்தியானம் எனவும், பின்னேயது நிஷ்களத்தியானம் எனவும் கூறப்படும். இத் திருப்பாடலிற் குறித்தது சிவத்தியானமாகும். காணுதல்வடிவளவிற் காண்டல். அறிதல்-அதன் இயல்பினை உள்ள வாறறிதல். மதிப்பவர் மனமணி விளக்கை’ என்றவாறு உள்ளத்துள்ளே நாடி அவ்வொளி தோன்றுமாறு தியானித் தால் கண்ணுடியுள் வடிவந்தோன்றுமாறு போல உயிர்க் குயிராய இறைவன் உள்ளத் துள்ளே ஒளியுருவாய்க் கலந்து வெளிப்பட்டருள்வன் என்பார், உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிடிற், கண்ணுடிபோலே கலந்திருந்தானே? என்ருர்.

தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான் முகனுந்

தேடித்தேடொளுத் தேவனையென்னுள்ளே

தேடிக் கண்டுகொண்டேன்??

என்பது திருநாவுக்கரசரது தியான அநுபவமாகும்.