பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

153


அட்டமாசித்தி

99. தானே அணுவும் சகத்துத் தன் நோன்மையும்

மானக் கனமும் பரகாயத் தேகமும் தானுவதும் பரகாயஞ் சேர் தன்மையும் ஆதை வுண்மையும் வியாபியும் ஆம்

எட்டே. (649) எட்டுச் சித்திகளேயும் தொகுத்துக் கூறுகின்றது .

(இ - ள்) தன்னை அணுவாகச் சுருக்கிக் கொள்ளும் அணி மாவும், உலகத்துத் தன்னே மலேபோலப் பெருக்கிக் கொள்ளும் மகிமாவும், அளவிடமுடியாத கனமுடைய தாகச் செய்யும் கரிமாவும், ஆகாயம்போல நொய்தாகச் செய்யும் இலகிமாவும், எங்குந் தாகை விரிந்து எல்லா வற்றையும் தன்பால் தருவிக்கும் பிராப்தியும், தான் விரும்பிய பொருள்களைப் படைத்து விரும்பிய வடிவிற் சேர்ந்து நுகரும் பிராகாமியமும், தத்துவங்களே நீங்காது நின்று விரும்பியபடி நடத்தும் உண்மை நிலேயாகிய ஈசத்து வமும், தத்துவங்களில் கலந்து எங்கு ம் வியாபித்து எல்லாவற்றையும் தன் பால் ஈர்க்கும் வசித்துவமும் எனச் சித்திகள் எட்டாகும் எ-று.

அணிமா தம் உடம்பினே அணுவினும் மிக நுண் னிய தாக்கிக் கொள்ளும் வன் மை. மகிமா - மலேயினும் மிக்க பெருமையுடைய வடிவினேக் கொள்ளுந் திறன். கரிமா - இலேசான பஞ்சினையும் அளவிடமுடியாத கன முடையதாகச் செய்யும் ஆற்றல். இலகிமா - எத்துணைக் கனமுடைய பொருளே யும் ஆகாயத்தினும் நொய் தாகச் செய்யும் திறன். பிராப்தி - வேண்டியவெல்லாம் விரும் பியவாறு அடையப் பெறுதல். பிராகாமியம் - விரும்பிய நுகர் பொருள்களே ப் படைத்து விரும்பிய பல வடிவிற்