பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருமந்திரம்

புகுந்து அவற்றை நுகர்தல். ஈசத்துவம் - தத்துவங்களே நீங்காமல் நின்று அவற்றை ந ட த் து ம் இயல்பில்ை தேவர் முதலியோரால் வழிபடப்பெறுதல் வசித்துவம். எல்லா உலகங்களையும் தன்வசப்படுத்தல்.

100. ஒதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து

பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லே காதலில் அண்ணலேக் காண இனியவர் நாதன் இருந்த நகர் அறி வாரே (707)

புறத்தேயுள்ள தலங்களிற் சென்று இறைவனைக் காண்ப தினும் தம் அகத்தே கண்டு வழிபடுதலே மிகவும் பயன் தருவதாம் என அறிவுறுத்துகின்றது.

(இ - ள்) அலைகளேயுடைய கடல் ஆரவாரிக்கும் உலகினை வலம் வந்து தம்முடைய கால்கள் வருந்த நடந்து தலயாத்திரை செய்தும் (அதற்ை பெறும்) பயன் ஒன்றுமில்லை. பேரன்பினுல் இறைவனைத் தம்முள்ளத்தே கண்டு மகிழும் இனிமையுடையார் ஆன்ம நாயகனுகிய இறைவன் எழுந்தருளிய நகர் இதுவேயென்று அறியும் தெளிவுடையாராவர் எ-று.

ஒதம் - அலே; அலேகளையுடைய கடலையுணர்த்தியது. இறைவன் உயிர்க்குயிராய் எங்கும் நீக்கமறக் கலந்துள் ளான் என்னும் உண்மையையுணர்ந்து அம் முதல்வனைத் தமது அகத்தே கண்டு வழிபடுந் தெளிவுடைய சிவ யோகிகளே எங்கும் வியாபித்து எவ்வுயிர்களேயும் தம் வசப்படுத்தவல்ல வசித்துவமுடையோராவர் என்பதாம்.

  • கங்கை யாடிலென் காவிரி யாடிலென்

கொங்கு தண்குமரித் துறை யாடிலென் ஒங்கு மாகடல் ஒதநீராடி லென் எங்கும் ஈசன் எதைவர்க் கில்லையே? (5-99-2)