பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

155


எனவும், கான நாடு கலந்து திரியிலென் ஞானன் என் வர்க்கன்றி நன்கில்லேயே? எனவும்,

"நாடினர் கமலம் மலரயகுே டிரனியன் ஆகங்கீண்டவன்

நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பானைப் பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறுபத்தர்கள்

சித்தத்துள் புக்குத் தேடிக் கண்டுகொண்டேன் திருவாரூர்

அம்மானே? (4-20-10) எனவும் வரும் அப்பர் அருள் மொழிகள் வசித்துவமுடைய பத்தர்களது மாண்பினே நன்கு விளக்குவனவாகும்.

101. ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று மீதான தற்பரை மேவும் பரனெடு மேதாதி யிரெண் கலசெல்ல மீதொளி ஒதா அசிந்த மீ தானந்த யோகமே. (709)

ஆனந்த யோக நெறிக்கு உபாயம் கூறுகின்றது.

(இ-ள்) ஆறு ஆதாரங்களிலும் வைத்து முறையே வழிபடுதற்குரிய அதிதெய்வங்களாகிய மூர்த்திகளின் திரு வருளுடனே மேற்சென்று புருவ நடுவாகிய ஆ ஞ்ஞைத் தானத்திற்கு அப்பால் மேலான பிரமரந்திரமாகிய வெளி யில் (ஆயிரஇதழ்த்தாமரையில் தற்பரையாகிய சத்தியுடன் கூடிய சிவபரம் பொருளோடு அறிவுத்தானமாகிய மேதை முதலிய பதினறு கலைகளையுடைய மதி மண்டலத்தை யடைய மேற்பட்டுத் தோன்றும் பேரொளிக் காட்சியில் ஒதுதற்கும் சிந்தித்தற்கும் அரிய நிலேயில் ஒன்றி இன் புறுதலே சிவானந்த யோகமாம் எ-று.

ஆறு ஆதாரங்களாவன: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி. ஆஞ்ஞை என்பன.

இவற்றில் வைத்து வ ழி ப டு த ற் கு ரி ய அதிதெய்வங்கள் முறையே விநாயகன், பிரமன், திருமால், உருத்திரன்,