பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 திருமந்திரம்

என்ருர். இப்பாட்டில் மிகுதல் என்னும் சொல் முதலடியி லும் நான்காமடியிலும் சிறத்தல் என்ற பொருளிலும், இரண்டா மடியிலும் மூன்ரு மடியிலும் கடத்தல்-விலகுதல் என்ற பொருளிலும் ஆளப்பெற்றுளது. சிவஞானமாகிய மெய்யுணர்வினுல் மிக்கவர்களே மக்களில் தலையாயினர் என்பார், ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்கா ரே என்ருர், ‘ஞானத்தால் தொழுவார் சிவஞானிகள்? ஞானன் என்ப வர்க்கன்றி நன்கில்லேயே? (அ) நுண்ணறிவால் வழிபாடு செய்யுங்காலுடையான் (ச) என வரும் திருமுறைகள் இங்கு நோக்கத்தக்கன.

சன்மார்க்கம்

115. சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி

உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள் ளார்க்கு வகுத்து

வைத்தான்ே. (1478)

சன்மார்க்கத்தின் சிறப்பு உணர்த்துகின்றது.

(இ-ள்) உயிர்களைச் சிவத்துடன் ஒன்றுமாறு உணர்த் தும் சிவசமயத்தின் தனி முதல்வகிைய இறைவன் ஆன் மாக்கள் பாசப்பிணிப்பினின்றும் விடுபட்டு உய்திபெற வகுத்தருளிய உபதேச நெறியாகிய குருநெறி ஒன்றுளது. அதுதான் சிவமாந் தன்மைப் பெருவாழ்வை நல்கும் சிவ நெறியாகும். சன்மார்க்கமாகிய அதனைச் சேர்ந்து உய்தி பெற உலகில் வாழ்வார்க்கு வகைபெற விளக்கிவைத் தருளினன் எ-று.

சத்-மார்க்கம்-சன்மார்க்கம் எனத்திரிந்தது தமிழ்மரபு. சத்-உள்ளது; என்றது ஞானமேயாகிய இறைவனே . சன்