பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 திருமந்திரம்

பாங்கான பாசம் என்ருர், படர்தல் - மேல் அடர்தல். படரினும் என் புழி உம்மை எதிர்மறை. ஆங்காரம் - யான் என்னும் தற்போதம். அது என்றது ஞேயத்தை . அதன் நிலை நிற்றல் - ஞேயமாகிய மெய்ப்பொருளுணர் வில் அடங்கிநிற்றல். நீங்கா நிலை, அமுத நிலை எனத் தனித்தனி இயையும். நீங்க நிலே - தன் இனச் சார்ந் தாரைப் புறத்தே நீங்கவிடாது பிரிவற உடனுக்கிக் கொள் ளும் நிலை அமுத நிலே - பேராவியற்கையாகிய இன்ப நிலை. இந்நிலையினை ,

பாசிபடு குட்டத்திற் கல்லினை விட்டெறியப்

படும்பொழுது நீங்கிஅது விடும்பொழுதிற் பரக்கும் மாசுபடு மலமாயை யருங்கன்ம மனத்தும்

அரனடியை யுனரும் போதகலும், பின்அணுகும்; நேசமொடும் திருவடிக் கீழ் நீங்காதே தூங்கும்

நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவேயாகி ஆசையொடும் அங்குமிங்கும் ஆகி அலமருவோர் அரும்பாச மறுக்கும்வகை அருளின் வழி

- யுரைப்பாம் (291) எனவரும் சித்தியாரில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள் ளமை காணலாம்.

இத்திருமந்திரத்தில் பாசம் படரா எனப் பாசநீக்க மும், நீங்கா அமுத நிலைபெறலாம்? எனச் சிவப்பேறும் ஆகிய இருவகைப் பயன்களும் தெரித்துணர்த்தப்பெற். றமை காண்க .

142. காணுத கண்ணுடன் கேளாத கேள்வியும்

கோதை போகமும் கூடாத கூட்டமும் நாதை நாணமும் நாதாந்த போதமுங் கான யெனவந்து காட்டினன்

நந்தியே. (1160)