பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£16 திருமந்திரம்

பற்றற்ருளுகிய பரம்பொருளேப் பற்றி யொழுகுதலே பற்றை யொழித்தற்குரிய உபாயமெனக் கூறுகின்றது.

(இ- ள்) துயநல்லறமே திருமேனியாகவுடையவன்; வினை வயத்தாலுளவாம் பிறப்பில்லாதவன்; பிறப்பில்லே யாகவே தனக்கெனத் தாய் தந்தை முதலிய சுற்றத் தொடர்பில்லாதவன். அவன் விரும்பி உறையும் இடம் (எல்லார் புறமும் தான்கண்டு தன்புறம் காண்போரையில் லாத) ஈமப்புறங் காடாகும். அவன் உண்னும் உணவோ ஊராரிடும் பிச்சையுணவாகும். அங்ங்னம் பிச்சையேற்பா ஞயினும் அத் துப்புரவையும் வேண்டாத துறவியும் அவனே. துறவற நெறியில் நின்ருர்க்குப் பெருந்துணை யாய் நின்று அன்னோது பிறவிப் பிணியைப் போக்கும் பெரும்பித்துக் கொண்டவனும் அம்முதல்வனேயென்று கண்டுணர்வீராக எ-று.

அேறவாழி அந்தணன் , அறவனே தாயுமிலி தந்தையிலி தான் தனியின் உண்பதும் ஊரிடுபிச்சை : 6.மூப்பதுமில்லே பிறப்பதில்லை யிறப்பதில்லை? பித்தரை யொத்தொரு பெற்றியர் துறந்தோருள்ளப் பெரும்பயனே? எனவரும் திருமுறைத் தொடர்கள் இங்குக் கருதத்தக்கன.

146. நெறியைப் படைத்தான் நெருஞ்சில்

படைததான நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும் நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு நெறியின் நெருஞ்சில்முட் பாயகி

லாவே. (1617) துன்பந் துறத்தற்குரிய துறவுநெறியினே மேற்கொண் டோர் அந்நெறியின் வழுவில்ை மீண்டும் துயரத்திற் குள்ளாவர் என்கின்றது.