பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

231


அனுபவமுடைய நல்லாசிரியனே க் குருவாகத் தேர்ந்து கொள்ள மாட்டாதார் குருட்டுத் தன்மையினைப் போக்க மாட்டாதானைக் குருவாகக் கொண்டுழல்வர். அன்னேரது செயல் குருடனும் குருடனும்கூடித் தம்முள் ஒருவரொரு வரைக் கண்ணுரக் கண்டுகொள்ள மாட்டாத குருட்டு நிலே யிலே நாடகமாடி அவ்விருவரும் குழியில் விழுந்து அவல முற்ற பேதைமைச் செயலே யொக்கும் எ-று.

மாணுக்கனது பக்குவமறியாத குருவும் உண்மையான ஆசிரியன் சிவன் என உணரும் பக்குவமில்லாத மானக் கனும் ஞான நூற் பொருளை உள்ளவாறு உணர்த்தவும் உணரவும் தகுதியில்லாத அபக்குவர் என அறிவுறுத்திய வாறு. குருடு என்றது உயிரின் அறிவாகிய கண்ணே மறைத்து நிற்கும் ஆணவப் படலமாகிய குருட்டுத் தன்மை யின. இருள் தரு துன்பப் படலம் மறைப்ப மெய்ஞ்ஞான மென்னும் பொருள்தரு கண்ணிழந்து உண்பொருள் நாடிப் புகலிழந்த குருடர் என்பது அப்பர் தேவாரம். குழிபிறரது உதவியின்றித் தாம் ஏறமாட்டாத படுகுழி. "கொடு நரகக் குழி நின்று அருள்தரு கைகொடுத்து ஏற்றும் என்றதும் இங்கு நினைக்கத்தகுவது.

பக்குவன்

உணர்த்தவும் உணரவும் ஏற்ற செவ்வியுடைய குருவும் மானுக்கனும் இவர் என அறிந்து தம்மைப் பிணித்துள்ள

மலங்களைப் படிமுறையே நீக்கும் பயிற்சியில் வேட்கை பெற்ற நல்லுயிர் பக்குவன் எனப்பெறும்.