பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 திருமந்திரம்

பாறி, வினேப்பயனை நுகர்ந்து தொலேத்தற் பொருட்டு அவ்வருளால் மறைக்கப்பட்டு நின்ற நி லேயில் என் குருநாதனுகிய சிவபெருமான் தனது திருவருளாகிய இன்பமயமான நிறைந்த அமுதத்தை உண்பித்துத் தனது திருவருளால் என்னுள்ளமே கோயிலாகக் கொண்டு புகுந்து எழுந்தருளின்ை எ-று.

பிறந்திட்டு, வளர்ந்திட்டு, இளேப்பாறி, மறைந்திட்டு என்பன ஆன்மாவின் தொழில்கள் . செய்தென்னெச்ச மாகிய இவற்றைச் செயவெ னெச்சங்களாகத் திரித்து ஊட்டி என்னும் பிற கருத்தாவின் வினை கொண்டுமுடிக்க. ஊட்டுதல் - நந்தியின் தொழில். பிறத்தல், வளர்தல், இளைப்பாறுதலாகிய தொழில்கள் உயிர்களின் வயத்தன வாதலின்றி இறைவனது அருளின் வயத்தனவாய்நிகழ்வன என்பார் அருளிற் பிறந்திட்டு . ... . மறைந்திட்டு என இத்தொழில்களின் நிகழ்ச்சிக்கு இறைவனது திருவருள் ஏது வாதலே விளக்கிக் கூறியருளினர். இத் திருமந்திரத்தில் இறைவன் செய்யும் ஐந்தொழில்களும் முறையே குறிக்கப் பெற்றிருத்தலும் இவற்றின் இறுதியிற் கூறப்பட்ட அருளேயன்றி முற்கூறப்பட்ட ஏனே நான்கும் அருளின் நிமித்தமாகவே நிகழ்வன என்பது தெளிவாக விளக்கப் பெற்றுள்ளமையும் காணலாம். இதன் பொருளே,

ஏற்றவிவை அரனருளின் திருவிளையாட் டாக

இயும்புவர்கள், அணுக்கள் இடர்க்கடல்

நின்றும்எடுத்தே ஊற்றமிக அருள்புரிதல் ஏதுவாக உரை செய்வர்

ஒடுக்கம் இளைப்பொழித்தல், மற்றைத் தோற்றம் மலபாகம்வரக், காத்தல் போக ந்

துய்ப்பித்தல், திரோதாயி நிறுத்தலாகும், போற்றலரும் அருள் அருளே யன்றிமற்றுப்

புகன்றவையும் அருளொழியப் புகலொனதே ?

(சிவப்பிரகாசம் 6)