பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 திருமந்திரம்

எனவே எவ்வுயிர்க்கும் பசிநீங்க உணவளித்தலே அம் முதல்வன் உவக் கு ம் நல்ல ற ம ம் என்பது கருத்து. * யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி’ என்பது ஈண்டு ஒப்புநோக்கற்பாலது.

பிட்சாவிதி

175. பரந் துலகேழும் படைத்த பிரான

இரந்துணி என்பர்கள் எற்றுக் கிரக்கும் நிரந்தர மாக நினேயும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச்

செய்தானே. (1888) இறைவன் பிச்சைத்தேவ ணுதற்குரிய காரணம் கூறுகின்

如@·

(இ-ள்) விரிந்து பரவிய ஏழுலகங்களையும் உண்டாக் கிய முதல்வனகிய சிவபெருமானே இரந்து பிச்சை யேற்று உண்பவன் என்று உரைப்பர் (அறியாதார்), எல்லாமுடை யாகிைய அம்முதல்வன் எதற்காக இரத்தற்றெழிலே மேற் கொள்ளவேண்டும்? இடைவிடாது தன் இனத் தியானிக்கும் அடியார்கள் இரந்து பிறர் இட்ட உணவினை உண்டு தன் திருவடியையடையும்வண்ணம் இவ்விரத்தற் கோலத்தை இறைவன் மேற்கொண்டருளினுன் எ-று.

இறைவனை இடைவிடாது போற்றுந் தொழிலினராய அடியார்கள் ஆக்கைக்கே இரைதேடி அலேயாமல் அன் புடையாரது மனக்கண் சென்று அவர் தரும் அமுதினை அளவாக வுண்டு தன் பொன் னடி யடைதற் பொருட்டே பிச்சை யேற்குந் தவ வேடத்தினத் தான் மேற்கொண்டு வழிகாட்டியதல்லது பசியும், பிணியும், பகையுமில்லாத அம் முதல்வன் வறுமையினலோ நுகர்ச்சி வேண்டியோ