பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

265


இரத்தற் ருெழிலே மேற்கொண்டிலன் என்பதாம். ஏற்ப திகழ்ச்சி என்னும் தாழ்வு அடியார்க்கு உலக மக்களால் எய்தாது பரிகரித்தற் பொருட்டே உ ல .ெ க ல மு ைடய இறைவன் இரத்தலேச் செய்தான் என்பதும் ஒரு நயம். * அங்கையோடேந்திப் பலிதிரி கருவூர்’ என்பது கருவூர்த் தேவர் அருள் மொழி.

ஆதித்த நிலை

இறைவன், அண்டம் பிண்டம் மனம் ஞானம் சிவம் ஆகிய ஐவகை நிலையினும் ஞாயிறேயாய் ஒளிவழங்கும் நிலே. இன்றெனக்கருளி இருள்கடிந் துள்ளத்தெழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை என்பது திரு வாசகம்.

176. செஞ் சுட ரோன்முத லாகிய தேவர்கள்

மஞ்சு டை மேரு வலம்வரு காரணம் எஞ் சுட ரீசன் இறைவன் இணே யடி தஞ் சுட ராக வணங்குந் தவமே. (1975)

இறைவன் ஞாயிறு முதலியவற்றுக்கு ஒளிவழங்கி அண்

டத்துள் ஞாயிருய் விளங்குந் திறன் உணர்த்துகின்றது.

(இ - ள்) செம்மைவாய்ந்த கதிர்களேயுடைய ஞாயிறு முதலிய தேவர்கள் மேகம் தோய்ந்த மேருமலையை வலம் வருவதற்குரிய காரணம் சுடர்வண்ணணுகிய எம் ஈசனும் எங்கும் நீக்கமறத் தங்கிய முதல்வனும் ஆகிய இறைவன் இணையடிகளின் ஒளி தம்மைச் சார்ந்து தோற்றும் ஒளி யாதல் வேண்டி வணங்கும் தவமேயாகும் எ-று.

செங்கதிரோன் முதலிய சுடர்கள் மேருவை வலம்வரு தலின் காரணம், கயிலாய நாதன் கழல்களாகிய திருவடி களே வணங்கி அவற்றின் ஒளியைத் தாம்பெற்று ஒளிர்தல்