பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 திருமந்திரம்

கண்காணி-தம் கீழுள்ளோர் செய்யும் செயல்களின் நன்மை தீமைகளே உடனிருந்து மேற்பார்த்து அவர்களே நெறிப்படுத்தும் அதிகாரி. கள்ளம்-பிறர் அறியாதவாறு வஞ்சனேயால் மறைவிற் செய்யும் செயல். காணுதல்-அறி வினுற் கூர்ந்து நோக்குதல். கண்காணி - கண்ணுள் (உயிரறிவில்) உடனின்று கானுபவன். மனத்தகத்தா ன் 零 * * * * காளத்தியான் அவன் என் கண்ணுளானே? எனவும், 'நானேதும் அறியாமே என்னுள் நின்று நல்லனவும் தீயனவும் காட்டா நின்ருய் எனவும் கள்ளனேன்....... சிரித் திட்டேனே ? எனவும் வரும் அருளிச் செயல்கள் இறைவன் கண்காணியாய் நிற்றலையும் அவ்வுண்மையினே யுணர்ந் தார் அதுகாறும் தாம் மறைவிற்செய்த தவறுகளுக்கு நாணி வருந்தி அவற்றை விட்டு நீங்குவர் என்பதனேயும் நன்கு புலப்படுத்துதல் காண்க.

‘எங்கும் உளனிறைவன் என்றுள்ளங் கொண்டுமிக

அங்கங் குலைவு தறிவு”

எனவும்

'வஞ்ச மனத்தான் படிற்ருெழுக்கம் பூதங்கள்

ஐந்து மகத்தே நகும்? எனவும் வருவன இங்கு ஒப்புநோக்குதற் குரியன.

கேடு கண்டிரங்கல்

181. பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற்கரிய பிரானடி பேணுர் பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழந்

தார்களே (2090) பிறவிப் பயனைப் பெற முயலாது வீணே காலங்கழிக்கும் மாந்தரது நிலேமையினைக் கண்டு இரங்கிக் கூறியது.