பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

275


184. ஒன்றே குல னும் ஒருவனே தேவனும்

நன்றே நினேமின் நமனில்லே நாணுமே சென்றே புகுங்கதி யில்ல்ேநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினேந் துய்மினே.(2104) இதுவுமது .

(இ - ள்) பிறப்பு வகையாகிய குலமும் ஒன்றே வழி படுதற்குரிய பரம்பொருளாகிய இறைவனும் ஒருவனே. ஆதலால் எவ்வுயிர்க்கும் நலம் பயக்கும் எண்ணங்களேயே எண்ணுவீராக. அவ்வாறெண்ணின் நமக்கு நமல்ை வரும் இறப்புத் துன்பமில்லை. நாணமின்றிப் பல இடத்துஞ் சென்று பலரையும் நாடிப்புகும் நற்கதி பிறிதொன்று மில்லை. எனவே நீவிர் (ஒழுக்க நெறியில்) பிறழாது நின்று நுமது உள்ளத்தே இறைவனை நிலைபெற நினைந்து உய்தி பெறுவீராக எ - று.

குலம் - உயிர்களின் பிறப்புவகை. வினேயாலுளவாம் பிறப்பு உலகில் வெவ்வேறு வகையினவாகப் பிரித்துப் பேசப்படினும் உயிர்நிலை என்னும் பொதுமையால் நோக் கும் பொழுது அவைபற்றிய சிறப்பு எதுவுமில்லே என்பார் ஒன்றே குலமும்’ என்ருர் . பிறப் பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்? என்னுந் திருக்குறள் இத்தொடரில் நிலேபெற்றுள்ளது. எல்லா உயிர்களும் ஓரினமே அவ்வுயிர்களுக்குத் தலைவ கை நின்று அருள்புரியும் இறைவனும் ஒருவனே என் னும் இவ்வுண்மையினை உள்ளவாறு:உணர்ந்தோர் யாதும் ஊரே யாவருங் கேளிர் என எவ்வுயிர்க்கும் நன்றே நினைந்து உய்திபெறும் நல்லியல்பினராவராதலின் அன் னுேர்க்கு இறத்தல் துன்பம் என்றும் நேராது என்பார் நேன்றே நினைமின் நமனில்லே? என்ருர், நலம்பெற விரும் பியவர்கள் நாணமின்றிப் பலரிடத்துஞ் சென்று நற்