பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

281


வண்ணம், நேர்ந்தவன் (1-113-5) எனவும், தன் னடைந்தார்க்கின் பங்கள் தருவானே? (2-4-11) எனவும் சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன் ? (4-11-6) எனவும் வரும் அருளிச்செயல்கள் இங்கு ஒப்புநோக்கத் தக்கன. பேர்தல் - பற்றி நிற்றற்குறிய நிலேயினின்றும் விலகிச் செல்லுதல். இன்னுப்பிறவி-இன் ைைமக்கு (த்து ன்பத்திற்கு) ஏதுவாகிய பிறவி. பிறவி இன்னுது எனவே பிறவாமையே பேரின்பமாம் என்ருரா யிற்று. பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம், பிறவா ருறு வது பெரும் பேரின்பம் (மணிமேகலை ) என்ருர் பிறரும். கூர்தல் - உள்ளது சிறத்தல்; உயிர்க்குயிராய இறைவன்பால் அன்பு மீதுாரப் பெறுதல். குறை கழல் - ஒலிக்குங்கழலணிந்த திருவடி; என்றது திருவடி ஞானத்தை சேர்தல் - அதனையடைதல். தேவர் - பரம் பொருள் . சென்றுணர்தல் - அழுந்தியுணர்தல் .

சார் ந் தாரைக் காத்தல் தலைவர் கடனுதல் சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனுய்ச் - சார்ந்தடியார் தாந்தாச்ை செய்துபிறர் தங்கள்வினை தான் கொடுத்தல் ஆய்ந்தார்முற் செய்வினையும் ஆங்கு?

. (சிவஞான போதம் . சூ-10) எனவரும் உதாரண வெண்பா இத்திருமந்திரப்பொருளேத் தழுவியமைந்ததாகும்.

எட்டாந்தந்திரம்

இது, உடலிற் பஞ்சபேதம் என்பது முதல் சோதனை என்பது ஈருக நாற்பத்து மூன்று உட்பிரிவுகளையுடையது . சிவ தரிசனத்தின் பின் சிவனெடு கூடுதல் என்னும் சிவ யோக நிலேயினே யுணர்த்துதல் எட்டா ந் தந்திரத்தின் கருத்தென்பர் பெரியோர். இத் தந்திரத்திற் கூறப்படும் சிவயோக நிலே கள் பற்றிய அரும் பொருள்களும் மேற் கூறப்பட்ட அட்டாங்கயோகம் முதலிய நுண் பொருள்களும்