பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 திருமந்திரம்

அநுபவமுடைய ஆசிரியர்வழி யுணர்ந்து கொள்ளத்தக் கணவன்றி ஏனையோரால் எளிதில் உணரத்தக்கன அல்ல

189. ஆணவ மாயையுங் கன்மமு மாமலங்

கானு முளேக்குத் தவிடுமி யான்மாவும் தானுவை யொவ்வாமற் றண்டுல மாய்

நிற்கும் பேணுவாய் மற்றுநின் பாசம்

பிரித்தே. (2.192) உயிரைப் பிணித்துள்ள மும்மலங்களேப்பற்றிய இயல்பு உணர்த்துகின்றது.

(இ - ள்) ஆணவம் மாயை கன்மம் ஆகிய மும்மலங் களும் நெல்லில் (அரிசியைச் சூழ்ந்து) அமைந்துள்ள முளை, தவிடு, உமி என்பவற்றைப் போன்று உயிரை முறையே பிணித்து மறைத்துள்ளன. ஆன்மாவும் பரம் பொருளே யொத்து வியாபக நிலையை யுடையதாகாமல் முளே தவிடு உமியினுல் மறைக்கப்பட்ட அரிசியினைப் போன்று இம் மும்மலங்களால் மறைக்கப்பட்டுக் கட்டுற்று நிற்கும். எனவே ஆன்மாவாகிய நீ நின்னின் வேருகிய இப்பாசங்களே வேருகப் பிரித்துணர் தற்பொருட்டுத் தாணு வாகிய இறைவன் திருவடியை விரும்பிப் போற்றுவாயாக

எ-று.

முேம்மல நெல்லினுக்கு முளையொடு தவிடுமியோல் மம்மர்செய் தணுவினுண்மை வடிவினை மறைத்து

நின்று: (176) எனவரும் சித்தியாரும்,

'உயிருண்டாவே யுளது மலம் மலம் முளதா

யொழிந்தவெல்லாம்

நெல்லின்முளை தவிடுமிபோல் அநாதியாக

நிகழ்த்திடுவர் இது சைவம் நிகழ்த்துமாறே? (25)