பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 திருமந்திரம்

(இ - ள்) பசுக்களோ பல நிறத்தன. ஆயினும் அவற்றின் பால் வெண்மையாகிய ஒரே நிறத்ததாம். அப் பசுக்களேப் புலங்களிற் செலுத்தி மேய்ப்பாளுகிய ஆயன் ஒரே வண்ணத்தன். பசுக்களே மேய்க்குந் தொழிலே மேற் கொண்டுள்ள ஆயன் கையிற் கொண்ட கோலினேக் கீழே போடுவானுயின் (அக்கோலினுல் மொத்துண்டு முன்னர் வெகுண்டோடிய) அப்பசுக்கள் தம் தலைவனுகிய அவனே அன்பிற்ை பற்றிச் சூழ்ந்துகொண்டு அவனைவிட்டு நீங்க

மாட்டா எ -று.

உயிர்கள் ஒரு மலமுடைய விஞ்ஞானுகலர், இரு மல் முடைய பிரளாயா கலர், மும்மலமுடைய சகலர் எனப் பல திறத்தனவாயினும் அவை யாவும் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையாகிய ஓரியல்பேயுடையன என்பார், பசுக்கள் பலவண்ணம் பால் ஒருவண்ணம் என்றர். பால் - வெண்ணிறம்; இங்குச் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையினைக் குறிப்பால் உணர்த்தியது. உயிர்கள் பல இறைவன் ஒருவனே என்பது உணர்த்துவார் பசுக்களே மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்? என்ருர். கோல் என்றது உயிர்களே வினைகளின் வழி மறைத்து நின்று பக்குவப்படுத்தும் சினமருவு திரோதாயியாகிய,சத்தியினை * கோலப் போடுதலாவது அக்கோலினல் உயிர்களின் மலங்கழலும் பக்குவமெய்தியபின் சினமிக்கு நின்று தொழிற் படுத்தும் அத் திரோதான சத்தியே சினமடங்கித் திரு வருட் சத்தியாக மாறுதல். அத்திருவருட் சத்தி பதிந்த பின் உயிர்கள் யாவும் மருட்சிக்கேதுவாகிய பாசப்பிணிப் பின் நீங்கிச் சிவஞானமாகிய தெளிவுபெற்றுச் சிவபரம் பொருளேயே தலைப்பட்டு இன்புறும் நிலையினவாம் என் பார், பசுக்களே மேய்க்கின்ற ஆயன் கோல் போடிற் பசுக் கள் தலைவனப்பற்றி விடாவே' என்ருர். மூலன்பாற் பசுக் கள் கொண்ட அன்பினே நேரிற்கண்ட சிவயோகியார் தாம் கண்ட காட்சியை அடியொற்றியே பசுபதிபால் உயிர்கள்