பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

287


ஆன்மா, உடல்கருவி முதலியவற்றைப் பெற்று உலகிற் பிறந்து போகம் நுகர்ந்து திரியும் நிலே சகலா வத்தை என்பதாம். இத் திருமந்திரச் சொற்பொருளே அடியொற்றியது,

'உருவினைக் கொண்டு போகபோக்கியத் துன்னல் செப்பல்

வரு செயல் மருவிச் சத்தமாதியாம் விடயந்தன்னிற் புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்குழன்று திரிதரும் சகலமான அவத்தையிற் சிவன்சென்றே. (230) என வரும் சிவஞான சித்தியாராகும்.

உருவினைக் கொண்டும் போக காண்டமாகிய கலே முதலியவற்ருேடு செறிந்தும் இச்சையுற்றும் நால்வகை வாக்குக்களர்ல் நிகழும் அறிவினையடைந்தும் தொழிலப் பொருந்தியும் சத்தாதி விடயங்களில் விருப்பஞ் செய்தும் போகம் நுகர்ந்தும் இவ்வுலகிற் பிறப்பிறப்புக்களிற் புக் குழன்றும் ஏகதேசியாய் சகலாவத்தையிற் சிவித்து நிற்பவன் சீவன் என்பது இதன் பொருள் .

போகம் - நுகர் ச்சி. போக்கியம் - நுகர்பொருள் . போககாண்டமாகிய கலே முதலியவற்றைப் போகமென்றும் போக்கிய காண்டமாகிய புந்தி முதலியவற்றைப் போக் கிய மென்றுங் கூறினர்.

193. இருவினே யொத்திட இன்னருட் சத்தி

மருவி ஞானத்தில் ஆதன மன்னிக் குருவினேக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப் பெருமல நீங்கிப் பிறவாமை சுத்தமே.(2262)

ஆன்மா பாசப் பிணிப்பினின்றும் நீங்கிய தூய நிலையாகிய சுத்தாவத்தையின் இயல்புணர்த்துகின்றது.

(இ - ள்) இருவினேயொப்பு நிகழ இனிய திருவரு ளாகிய சத்தி பதிய ஞான யோகத்தில் ஒன்றியிருத்தலில்