பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

295


ஆறந்தம்

199. வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஒதத் தகுமெட் டியோகாந்த அந்தமும் ஆதிக் கலாந்தமும் ஆறந்த மாமே. (2370) ஆறுவகைச் சமயதத்துவ முடிவுகள் இவையென்பது உணர்த்துகின்றது.

(இ- ள்) வேதாந்தம்; அதன் மேம்பட்ட சித்தாந்தம், நாதாந்தம், போதா ந்தம், எடுத்தோது தற்குரிய எண் வகை யுறுப்புக்களுடன் கூடிய யோகாந்தம், முதற்கண் உணரத்தக்க கலாந்தம் எனச் சமயதத்துவ முடிவுகள் அறுவகைப்படும் எ - று.

200. சித்தாந் தேசீவன் முத் தி சித் தித்தலால்

சித்தாந் தே நிற்போர் முத்திசித் தித்தவர் சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு

ளாதலால் சித்தர்ந்த வேதாந்தங் காட்டுஞ்

சிவனேயே. (2394)

உடல் கருவிகளோடு கூடியும் அவற்றில் அழுந்தாமல் சீவன் முத்தராம் நிலே சித்தாந்தச் செந்நெறிக்குரிய தென் கின்றது .

(இ - ள்) சித்தாந்தச் செந்நெறியிலே இவ்வொரு பிறவியிலேயே சீவன்முத்தி கைவரப்பெறுதலால் அந்நெறி யிற் பிறழாது நின்ருெழுகவல்லவர் சீவன் முத்தி கைவரப் பெற்றவராவர். மெய்ந் நெறியாகிய சைவ சித்தாந்தமும்