உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 திருமந்திரம்

உலகியல் நெறியாகிய வேதாந்தமும் ஆகிய இவற் றிற் கூறப்படுவன சிறப்பும் பொதுவுமாகிய செம்பொருள் களாதலால் சித்தாந்தமும் வேதாந்தமும் சிவனது சிறப் பியல்பும் பொது வியல்புமாகிய உண்மைத் தன்மைகளே விளக்கி நிற்பனவாம் எ - று.

சித்தாந்தம்-சிவாகமங்களின் முடிந்த முடிபு. சீவன் முத்தியாவது உயிரானது உடம்பு முதலியவற்ருேடு கூடிய நிலேயிலும் அவற்றிற் பற்றுச் சிறிதுமின்றிச் சிவபரம் பொருளில் அழுந்தி நிற்றல். சித்தித்தல் - கைகூடுதல். செம்பொருள் - முரணில் பொருள் . சித்தாந்த வேதாந்தம் சிவனே க் காட்டும் என்க.

சிவபெருமான் குருவடிவாய் எழுந்தருளிவந்து அருள் நோக்கமாகிய தீக்கைசெய்து இப்பிறப்பிலேயே சீவன் முக்த ராகச் செய்து ஆட்கொண்டு மும்மல அழுக்கைக் கழுவி ஞானக்கடலில் மூழ்கச் செய்து சிவாநந்தம் மேலிடச் செய்து மேல்வரும் பிறவியை யொழித்து முத்தி முடிவாகிய திருவ்டிக் கீழ் வைத்தருள் வன் என்னும் சித்தாந்த உண்மையினே,

'சித்தாந்தத் தேசிவன்றன் றிருக்கடைக்கண் சேர்த்திச்

செனன மொன்றிலே சிவன் முத்தராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி

மடுத்தானந்தம் பொழிந்து வரும்பிறப்பை யறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்ப னென்று

மொழிந்திடவும் உலகரெலா மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்

பெருங்குழியில் வீழ்ந்திடுவ ரிதுவென்ன பிராந்தி’

(சித்தி - சுபக் 268)