பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

309


அவாவறுத்தல்

முன்னும் பின்னும் வினைத்தொடர்பறுத்த ஞானி களுக்கு இடையில் நின்ற உடம்பும் அதுகொண்ட வினைப் பயன்களும் எஞ்சி நிற்றலால் முன்னர்த் துறக்கப்பட்ட புலன்கள் மேல் பழைய பழக்க வாசனேயால் ஒரே வழி நினைவு நிகழ்தல் இயல்பு. நினேவளவாகிய அவ் அவாவும் பிறவிக்கு வித்தாம் ஆதலின் அதனே இடைவிடாது மெய்ப் பொருளுணர்வால் வேரறக்களே தல்.

210, ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்

ஈசனே டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே. (26.15)

உலகப் பொருள்கள் மேல் வைத்த பற்றினே விட்டொழித் தலின் இன்றியமையாமை யுணர்த்துகின்றது .

(இ-ள்) உலகப் பொருள்கள் மேல் பற்று வைக்க வைக்க அவ்வாசையால் மேன்மேலும் துன்பங்களேயுளவாம். பொருள்கள் மேற் கொண்ட பற்றினைப் படிப்படியாக விட்டொழிக்க விட்டொழிக்க அப்பற்றறுதியால் பேரின்பம் மேன்மே லுளதாகும். ஆகவே ஆசையை வேறக் களை மின்; ஆசையை வேரறக் களே மின்; உலகப் பொருள் வழித்தோன்றும் அவ் ஆசை ஈசனைக் குறித்த தொடர் புடையதாய் நிகழ்வதாயினும் அதனே வேரறக்களைவீராக.

எ-று.

ஆசை - புறமாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய யாக்கையின் கண்ணும் உளதாம் பற்று. சித்துப் பொருள் மேல் வைப்பின் அன்பெனப்படும்.