பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 3.11

மாகிய நற்பேறுடையவர்களேயே இறைவன் தனக்குரிய அடிய வகை ஏற்றருள் வன் என்பதும் அறிவுறுத்தவாறு.

புகவே த கேனுனக் கன் பருள் யானென் பொல்லாமணியே தகவே யெனே யுனக் காட்கொண்ட தன்மை’ எனவும்

தன் சீரடியார் குலம்பணி கொள்ள எனக்கொடுத்தோன் : எனவும் வரும் மணிமொழிகள் இங்குச் சிந்தித்தற்குரியன.

சோதனை

உயிர்கள் வாழ்க்கைப் பயன்களே நுகர்தற்குரிய வழிக ளாகிய மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலே என்னும் அறுவகை நெறிகளுள், மந்திரம் பதத்திலும் பதம் வன்னத்திலும் வன்னம் புவனத்திலும் புவனம் தத்துவத்திலும் தத்துவம் கலேயிலும் அடங்க ஒடுக்கிக் கலேயைத் திரோதான சத்தியிலும் திரோதான சத்தியைச் சிவத்திலும் அடங்குமாறு குரு தீகூைடியினல் மானுக்கனைச் சோதித்துத் தூய்மை செய்தல்.

"பொல்லாத என்னழுக்கிற் புகுவான் என்னைப்

புறம்புறமே சோதித்த புநிதன் ?

என்பது திருத்தாண்டகம்:

212. அறிவறி வென்றங் கரற்றும் உலகம்

அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறியாமை கடந்தறி வானுல் அறிவறி யாமை யழகிய வாறே. (2637) குரு அத்துவாக்களேச் சோதித்துத் தீக்கைசெய்ய அதல்ை மாணவனிடத்தே சிவம் பிரகாசிக்குமாறு உணர்த்து கின்றது.