பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 திருமந்திரம்

கன்மம் திரோதான சத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்குதலின் வேறு கூறப்படவில்லே. மகரம் ஆணவமலத் தையே குறிப்பது. ஆயினும் அழுக்கு நீக்கும் உவர்மண் போன்று அம்மலத்தைக் கழுவுதற்கென இறைவற்ை கூட்டப்பட்டது மாயை என்பார் அதனையும் மலத்தொடு இணைத்து மலமாயை என ஒருங்கு குறித்தார் எனக் கருத வேண்டியுள்ளது. இத்திருமந்திரத்தை அடியொற்றி இதன் விளக்கமாக அமைந்தது,

'சிவனரு ளாவி திரோதமல மைந்தும்

அவனெழுத் தஞ்சி னடைவாம் - இவனின்று

நம்முதலா ஒதிலருள் நாடாது நாடும் அருள்

சிம்முதலா ஒது நீ சென்று? எனவரும் உண்மை விளக்கமாகும். இதன் கண் கன்ம மும் மாயையும் தனித்துச் சொல்லப்படவில்லை. மாயை யும் கன்மமும் திரோதான சத்திக்குக் கருவியாய் அத னுள் அடங்குதலின், திரோதான சத்தியின் இலக்கணங் கூறவே மாயை கன்மங்களது இலக்கணமுங் கூறியவாரு த லறிக (சிவ - பாடியம். சூ-5) என விளக்குவர் சிவ ஞான முனிவர். எனவே இத் திருமந்திரத்தின் இரண்

L.fr Loiq.

சிவனரு ளான்மாத் திரோத மலமாம்: என்றிருத்தல் வேண்டும் எனத் தோற்றுகின்றது. திரு வைந்தெழுத்து இறைவன் திருவருளின் வண்ணமாய தென்பதனை 'ஆதியா ரருளாய வஞ்செழுத் தோதியேறி ர்ை உய்ய உலகெலாம் எனவரும் சேக்கிழார் வாய்மொழி யால் இனிது புலம்ை.

திருவாய்ப் பொலியச் சிவாயநம வென்று நீறணிந்தேன்: “நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப் பெற்றேன் ?

எனவரும் திருமுறைத் தொடர்கள் சூக்கும பஞ்சாக்கரத் தின் உருவினைப் புலப்படுத்தல் காண்க,