பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

321


எனவரும் திருவாசகம் சத்தியும் சிவமும் ஒத்திருபாலுற முத்தியாகும் முறைமையருளிய உண்மை”யை அறிவுறுத்து வதென்பர் சீகாழித் தாண்டவராயர்.

திருக்கூத்துத் தரிசனம்

218. எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி

எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்கும் தங்குஞ் சிவனருள் தன்விளே

யாட்டதே. (2722) இறைவனது திருக்கூத்தினைத் தரிசிக்குமாறு கூறுகின்றது .

(இ-ள்) உலகப் பொருள்கள் தோறும் சிவனதுசத்தியா கிய திருவருள் கலந்து நிற்றலால் எவ்விடத்துப் பொருளும் அம்முதல்வனுக்குரிய திருமேனியேயாகும். நிற்பன நடப்பனவாகிய பொருள்கள் எங்கும் அவனது அருளியக்க மாகிய திருக்கூத்து நடைபெறுதலால் எல்லா இடங்களும் அவனது திருக்கூத்து நிகழும் சிற்றம்பலமாகும். இவ் வாறு எவ்விடத்தும் சிவ பரம் பொருளே உள்ளும் புறம்பு மாய்க் கலந்து நிற்றலால் பார்க்கும் இடங்கள் யாவும் நீக்கமறத் தங்கும் சிவபெருமானது அருள் விளையாடலே இடையீடின்றி நிகழ்வதாகும் எ - று.

எங்கும் சிவசத்தியாதலால் எங்குந் திருமேனி என வும், எங்குந் திருநட்டமாதலால் எங்கும் சிதம்பரம் என வும், எங்கும் சிவமாயிருத்தலால் உலகம் எங்கெங்கும் தங்கும் சிவன்தன் அருள் விளையாட்டே நிகழ்வது எனவும் அவனது அருளாற் கண்டு வழிபடுதலே திருக்கூத்துத் தரிசனமாகும் என்பதாம்.