பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 திருமந்திரம்

என வரும் திருத்தொண்டர் புராணச் செய்யுளாகும்.

'ஒங்கொளியாய் அருள் ஞான மூர்த்தியாகி

உலகமெலாந் தொழுதேத்தும் உமையம்மை காணத் தேங்கழும் மலரிதழி திங்கள் கங்கை

திகழரவம் வளர்சடைமேற் சேர வைத்து நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள்

நின்றிமையோர் தொழுதேத்த நிருத்தஞ்செய்யும் பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்

புந்தியினும் உறவணங்கிப் போற்றல் செய்வ னம் ? எனப்போற்றுவர் உமாபதி சிவனர்.

பொற்பதிக் கூத்து 221. மாணிக்கக் கூத்தன வண்தில்லேக் கூத்தனைப்

பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனேச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனே ஆணிப்பொற் கூத்தனே யாருரைப்பாரே.

(2743) இறைவன் தில்லேயிலே ஆடியருளும் திருக்கூத்தின் இயல்பினை வியந்து போற்றுகின்றது.

(இ- ள்) மாணிக்க மணியின் ஒளிமேனியணுகக் கூத்தியற்றுபவனும் வளம் பொருந்திய தில்லைப் பதியுள் ஆடல் புரிபவனும் அணிநலம் வாய்ந்த அம்பலத்திலே புரிந்த சடையாடக் கூத்தாடுபவனும் இட வரம்பினைக் கடந்து மிகச் சேய்மையிலும் சென்று பரவும் பேரொளியுடன் உயிர்களின் உள்ளத்தே சிவானந்தத்தை விளேக்கும் ஆனந்தக் கூத்தினை ஆடியருள்பவனும் மாற் றுயர்ந்த ஆணிப் பொன்னல் வேயப்பெற்ற அம்பலத் திலே அநவரதமும் ஆடல்புரிபவனும் ஆகிய இறைவனது பொருள் சேர் புகழினை எடுத்துரைக்க வல்லார் யாவர்? (ஒருவருமிலர்) எ - று.