பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

341


(இ-ள்) வரையாது வழங்கும் வள்ளன்மையின் தனக்கு ஒப்பாரிலாத தலைவனும், மேலாகிய நல்ல நாட்டினே யுடைய வேந்தனும், கங்கை வெள்ள மாகிய நீரைக் கரந்த சடையினையுடைய வேத முதல்வனும் ஆகிய இறைவன் வஞ்சனேயின் மிக்காராகிய கொடியோர்கள் தன்னைக் கண்டு விடுவார்களோ என்று அஞ்சியே அன்பராயினர் உள்ளத்தையே தனக்குப் பாதுகாப்பான இடமாகக் கொண்டு மறைந்திருந்து மன்னுயிர்களே ஆட்கொண்டருள் கின்ருன் எ-று.

வள்ளல்களாயினுர்க்குத் தலைவன் அவனே என்பார் வள்ளற்றலேவன் என்ருர் . 'வான நாடனே ? எனப்போற்று வர் சுந்தரர். வெள்ளந்தாழ் விரிசடையாய்? வேத முதல்: எனப் போற்றுவர் வாதவூரடிகள். கள்ளம்-வஞ்சனே. பெருமக்கள், இழித்தற் குறிப்பினது. காண்பர் கொலோ: என்றது, கண்டால் உயிர்த் தலைவயை தன்னையும் வஞ்சித்து உலகிற்குத் துன்பம் செய்வரோ என்னும் அச்சக் குறிப்பினதாகும்.

238. விண்ணவ யுைல கேழுக்கு மேலுளன்

மண்ணவ ய்ைவலஞ் சூழ்கடல் ஏழுக்குந் தண்ணவ யைது தன்மையின் நிற்பதோர் கண்ணவ கிைக் கலந்து நின் ருனே (3037) இறைவன் உலகெலாமாகி நீக்கமறக் கலந்து நின்றமை கூறுகின்றது.

(இ-ள்) விண்னெடு நீக்கமறக் கலந்தவனுய் ஏழுலகங் களுக்கும் மேலாக அப்பாற்பட்டு விரிந்துள்ளான். மண் னிடத்தே எங்கும் பரவியவனுகி உலகினைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களுக்குந் தண்மையை வழங்குபவய்ை அவ்வப் பொருளின் தன்மை போன்று பிரிவற நின்று உயிர்க்குக் காணுதவற்றைக் காட்டுவதொரு ஒப்பற்ற கண் அவனே