உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தந்திரம்

சிவஞானம் பெற முயல்வோர் அதற்குத் தகுதியுடையராகத் தம்மைத் தூய நல்லொழுக்க நெறியில் நிலைக்கச் செய்து கொள்ளுதல் வேண்டும் என வற்புறுத்தி அதற்குரிய சாதனங்களையும் உபதேசிப்பது இதன் முதல் தந்திர மாகும். 223 பாடல்களையுடைய இஃது 24 அதிகாரங்களாகப் பகுக்கப் பெற்றுளது. இதன் முதற்கண் உள்ள 30 பாடல்கள் உபதேசம் என்ற தலைப்பில் அமைந்துள்ளன. இதனையடுத்து யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை யென்பன உலகியலில், வைத்து அறிவுறுத்தப் பெற்றன. நிலைபெற்ற உயிர் தான் எடுத்துள்ள ஓருடம்பிலேயே நிலைபெற்றிருக்க இயலாத தன்மையினை யுரைப்பது உயிர் நிலையாமை யென்ற அதிகாரம். இதனையடுத்துக் கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன்மனை நயவாமை, மகளிர் இழிவு, நல்குரவு ஆகிய அதிகாரங்கள் உள்ளன. இவை திருக்குறளமைப்பினை அடியொற்றி அமைந்தனவாகும். இவற்றின் பின்னுள்ள அக்கினிகாரியம், அந்தணரொழுக்கம் என்பன வேதப் பொருளை யுளங்கொண்டு கூறியன. அரசாட்சி முறை, வானச்சிறப்பு, தானச்சிறப்பு, அறஞ்செய்வான் திறம், அறஞ்செயான் திறம், அன்புடைமை, கல்வி, கேள்வி, கல்லாமை, நடுவுநிலைமை, கள்ளுண்ணாமை என்பன உலகியலொழுக்கமாகத் திருவள்ளுவர் கூறியவற்றை உளங்கொண்டு, உலகியலின் உயிர் நிலையாய் நிலவும் மெய்ந்நெறியாகிய சமய வாழ்க்கைக்குப் பொருந்தும் வண்ணம் விரித்துக் கூறுவன. இங்குத் திருமூலர் அறுவுறுத்திய கல்வி, கேள்வி முதலிய பகுதிகள் உலகியலுக்குரிய கல்வி, கேள்வி முதலிய பொது வியல்புகளைக்