பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 திருமந்திரம்

தேசத்தினை இறைவன் வாய்மொழியென நம்பிக் கேட்டு அதன் வழி ஒன்றுபட்டொழுகலே ஞானத்தில் யோகமாகும். குருவே சிவனெனத் தியானித்து நிட்டைகூடலே ஞானத்தில் ஞானமாம்" எ-று.

‘காண்டல் முதலிய நான்கனுள் காண்டல் ஞானத்திற் சரியை. திருநாமம் செப்பல் ஞானத்திற் கிரியை. திரு வார்த்தை கேட்டல் ஞானத்தில் யோகம். குருவுருச் சிந்தித்தல் ஞானத்தில் ஞானம்’ எனக் கொள்ளுதல் பொருந்தும்.


29. போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினர்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே. (142)

சிவகுருவின் அருளுரையினைக் கடைப்பிடித்தொழுகுவோர் எய்தும் பயன் உணர்த்துகின்றது.

(இ-ள்) சிவஞானத்தை வழங்கிய எங்கள் தவப்பயனாகிய இறைவனைத் தமது உயிருணர்வில் வைத்துப் போற்றிச் சிவபுண்ணியரான பெரியோர்கள் இறைவனது அருட்கூத்துத் தரிசனத்தால் கண்கள் களிகூரப் பெற்று மறைகள் போற்ற வீட்டுலகினை அடைந்து இன்புறுவார்கள். (எ-று).

போதம் இரண்டனுள் மு ன் ன து மெய்யுணர்வு; சிவஞானம். பின்னது உயிருணர்வு; ஆன்மபோதம். புண்ணியம் என்றது சரியை கிரியை யோகம் என்னும் தவத்தின் பயனாகிய பதமுத்திகளை. போதந்தனில் வைத்தலாவது அம்முதல்வன் உடம்பின்கண் உயிர் போன்று ஆன்மாவே திருமேனியாகக் கலந்து நிற்கும் வண்ணம் தம்முனைப்பின்றி இறைபணியினராய் உயிராவணஞ்செய்து ஒட்டி வாழ்தல். இங்ங்னம் ஏகனாகி இறைபணி நின்றோர்,