பக்கம்:திருமாவளவன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 . திருமாவளவன்

டரசர்களுள் சிலர், தம் நாட்டின்மீது படையெடுத்து வரும் பகை அரசர்களுடன், தங்கள் நாட்டு அரசர்களுக்கு எதிராகச் சேர்ந்துகொள்வது வழக்கம் எனவும், இதற்கு வடகாடு நோக்கிச் சென்ற கரிகாலனுக்கு, வஜ்ஜிர, மகத மன்னர்கள் பகைவர்களாய் இருக்கும்போது அவந்தி அரசன் நண்பனய் இருந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுவது சான்ருகும் எனவும், இதல்ை, மேலைச் சளுக்கியர் தென்னுட்டில் அடிகோலக் கரிகாலன் துணை செய்தாளுதல் வேண்டும்,' எனவும் கூறுவர்.

டாக்டர். வெங்கடரமணய்யா அவர்கள், கிரிலோசன பல்லவன், கரிகாற்பெருவளத்தான் இருவரும் சமகாலத் தவரே என்பதை உறுதிசெய்யக் கூடிய சான்றுகள் பல உள என்பர்." -

1. ஐந்தாம் நூற்ருண்டைச் சேர்ந்தோணுகிய புராண காலப் பல்லவ கிரிலோசனன் வரலாறு, பதினோம் நாற்ருண்டில் வாழ்ந்த கீழைச்சளுக்கிய விமலாதித்தன் செப்பேட்டில், புராணகால நிகழ்ச்சியால் அறியப்படு கிறது. ஆதலாலும்,

2. திரிலோசனன், பல்லவர் மரபின் மாறுபட்ட ஈஸ்வர மரபைச் சேர்ந்தோன் என்று கூறப்படுவதாலும், 8. ஐந்தாம் நூற்ருண்டில் பல்லவர் வரலாறு நன்கு அறியப்படாமல் இருக்கும்போது, கரிகாலன் பல்லவரை அடக்கியிருத்தல் கூடும் என்பதை மட்டும் அறிதல் இய லாத ஆதலாலும், * . .

4. கீழைச்சளுக்கியர் செப்பேடுகள் வரலாற்றிற்குத் துணைபுரியும் தகுதியுடையனவா என்பதே உறுதிசெய்யப் படாமல் இருப்பதாலும்,

1. Studies in Chola History and Administration: P. 61.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/100&oldid=578874" இலிருந்து மீள்விக்கப்பட்டது