பக்கம்:திருமாவளவன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருமாவளவன்

பாராட்டுங் காலத்தும், அவர்கள் செய்த செயற்கரும் செயல் எல்லாவற்றையும் எடுத்து வகுத்துக்கூறுவதைப் புலவர்கள் வழக்கமாக மேற்கொள்வதிலர். புரவலரைப் பாராட்டுங் காலத்தும், தங்கள் வறுமை, தம்மைப் போன்ற புலவர்களே இரவலர்களைப் புரக்கவேண்டியதன் இன்றி யமையாமை, புரவலர் சிலர், தம்மைப்போன்ற புலவர்களைப் பேணியவகை ஆக இவற்றைப் பெரிய அளவில் கூறி, சிறிய அளவில், அப்புரவலர்கள் செய்த செயல் சிலவற். றைக் குறிப்பிடுவதே புலவர் வழக்கமாகும். புறத்துறை தழுவிய பாடல்களில் கானும் முறையிது. அகப்பொருள் தழுவிய பாடல்களாயின், பெரிதும் தாம் எடுத்துக் கொண்ட அகத்துறைப் பொருள் பற்றிய பகுதிகளையே பெரிதும் விளக்கி, இடையிடையே தம்மைப் புரந்த அரசர் களும், அவர்தம் முன்னேர்களும் செய்த சில அரும்பெரும் செயல், அவர்கள் வாழ் ஊர், ஆங்காங்கு நடைபெற்ற வேறு சில நிகழ்ச்சிகள் ஆக இவற்றை உவமையாக அமைத் துச் செல்வர். ஆகவே, பண்டைய வரலாற்றினை ஆராய்ந்து முடிவுசெய்யப் புகுவோர், தங்கள் ஆராய்ச்சி யில், பிற சான்றுகளைக் கொண்டு கண்ட முடிவினைப் புலவர் கள் கூற்றுக்களும் அாண்செய்வனவாக இருக்கின்றன என்று கொள்வதல்லது பிறசான்றுகளால் உறுதி செய்யப்பெற்ற ஒன்று, பழந்தமிழ்ப் புலவர்களால் கூறப் படவில்லை, ஆகவே, கொள்ளற்பாலகன்று என்று தள்ளு தல்கூடாது. புலவர்களால் குறிப்பிடப்பட்டவை, அவர் கள் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிலவே ஆகும். அவர்களால் குறிப்பிடப்படா நிகழ்ச்சிகள் பல உள்ளன. அவர்களால் கூறப்பட்டவை மட்டுமே அக்காலத்தில் நடை. பெற்றன; பிற இல்லை என்று கோடல் கூடாது. புலவர் களால் கூறப்பெருத பற்பல கிகழ்ச்சிகள் அவர்கள் காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/102&oldid=578876" இலிருந்து மீள்விக்கப்பட்டது