பக்கம்:திருமாவளவன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனும் காவிரியும் 91

தில் நடைபெற்றிருத்தல் கூடும் என்ற உண்மையை மறக் தல்கூடாது. ஆகவே, பண்டை இலக்கியத்தில் கூறப்பட வில்லை; ஆகவே, ஒப்புக்கொள்வதற்கில்லை என்று கூறுவது

சரியான ஆராய்ச்சி முறையாகாது. தாம் எழுதும் வர

லாற்றிற்குப் பழந்தமிழ் இலக்கியங்களைத் துணைகொள் வோர், இவ்வுண்மையை உள்ளத்திருத்தி ஆராயப்புகுவது,

அவர்களே ஆராய்ச்சித்துறையில் உண்மைவழியில்

யில் செலுத்துவற்குத் துணை புரிவதாகும். ஆகவே,

பிற சான்றுகளால் பெறப்படும் உண்மையைப் பழங்

தமிழ் இலக்கியச்சான்றுகள் துணைசெய்யவில்லை என்று

கூறித் தள்ளிவிடுவது நன்றன்று.

கிற்க. பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியா வர்கள், திருவாளர், மு. இராகவையங்காவர்கள் தொகுத்த பெருக் தொகையில் சில செய்யுட்கள் (எண். 778, 779) கரிகாலன் காவிரிக்குக் காைஅமைத்த வரலாற்றைக் குறிப்பிடுகின் றன என்று கூறிவிட்டு, அச்செய்யுட்கள் இன்னால், இன்னகாலத்தில் இயற்றப்பட்டன என்று அறியமுடியா நிலையில் இருப்பதால், அவற்றைச் சான்றுகளாக எற்றுக் கொள்வதற்கில்லை என்றும் கூறுவர்."

பழங்காலத்தில் பாடிய புலவர்கள் எல்லோரும், பாட் டின் முடிவில், பாட்டோடு பாட்டாகவோ, அன்றித் தனித்தோ, பாடியவர் இன்னர்; பாடியது இன்னுாை ; பாடிய காலம் இது என்பனவற்றைக் குறிக்கும் வழக் கத்தை மேற்கொண்டனால்லர். அவர்கள் பாக்களைத் தனித் தனியாகப் பாடிச்சென்றனர். பின் வந்தோர் அவற்றுள், தங்களுக்குக் கிடைத்த செய்யுட்களை, ஒரு வரையின் கீழ்க் கொணர்ந்து தொகுத்து அவற்றை இயற்றி

1. Studies in chola History and Administration. p. 68.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/103&oldid=578877" இலிருந்து மீள்விக்கப்பட்டது