பக்கம்:திருமாவளவன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - திருமாவளவன்

யோர், இயற்றப்பட்ட காலம் ஆக இவற்றைத் தாம் அறிந்த அளவில் குறித்து வைப்பாராயினர். தொகுக்க அவர்கள் மேற்கொண்ட முறை; பாட்டின் பொருள்; பாட்டின் வகை பாட்டின் அளவு இவையே ஆகும். இவ்வாறு தொகுக்கப் பெற்றவையே, புறமும், அகமும், கலித் தொகையும், கற்றிணையும், குறுந்தொகையுமாம். இவற் அறுள் காணப்பெறும் செய்யுட்களைக்கொண்டு, பாடியோர், பாடப்பட்டோர், பாடியகாலம் அறியப்படாமல் இருக்கும் போழ்து, அவற்றின் கீழ், பிற்காலத்தோரால் குறிக்கப் பெற்ற குறிப்புக்களைக்கொண்டே அப்பாட்டை இயற்றி யோர், யார்மீது பாடப்பெற்றது, பாடப்பெற்ற காலம் இவற்றை அறிய முடிகிறது. தொகுக்கப்பெற்ற பாடல்க ளுள்ளும், பாடியோர் பெயர்இல்லாப் பாடல்கள் பல. இவ்வாறு தொகுக்கப்பெற்ற பாடல்களே அல்லாமல், தொகுக்கப்பெருத பழம்பாடல்கள் பல உள்ளன என் பதை நாம் மறுத்தல்கூடாது. அவற்றுள் பல, உரையா சிரியர்களால் மேற்கோட் செய்யுள்களாக ஆங்காங்குக் காட்டப்பெற்றுள்ளன. சிற்சில, சிலபல அறிஞர்களால் அவ்வப்போது அறியப்பட்டும் வருகின்றன. ஆகவே, அவ்வாறு காணப்பட்ட பாடல்கள் பண்டைக்காலத்தி லேயே தொகுக்கப்பெருத காரணத்தால் நம்பத்தக்கன அல்ல என்று தள்ளிவிடுதல் கூடாது. அவை, நம் ஆராய்ச் சிக்கு எந்த அளவில் துணைசெய்யும் என்பதை ஆர.எண்ணி மேற்கொள்வதே அறிஞர்கள் கடனும்.

கரிகாலன் காலம் இரண்டாம் அாற்ருண்டே என்பது வரலாற்ருசிரியர் எல்லாரானும் ஒப்ப மேற்கொள்ளப்படு வது இல்லை. அவன் காலம் ஐந்தாம் நூற்ருண்டைச் சார்ந்தது என்பதைப் பல மேற்கோள்களுடன் நிலைநாட்டு வோரும் உளர். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/104&oldid=578878" இலிருந்து மீள்விக்கப்பட்டது