பக்கம்:திருமாவளவன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனும் காவிரியும் 93.

தெலுங்குக் கல்வெட்டுக்களே அல்லாமல், கரிகாலன் மரபில்வந்த சோழர்களைப்பற்றி அச்சோழர் அவைக்களப் புலவர் பாடிய பாக்களிலும், கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்த வரலாறு குறிப்பிடப்பட்டுளது என்பதையும் நாம மறததலகூடாது.

கிடைத்த சான்றுகளால் காணப்பட்ட முடிவை, மற்க்கக்கூடிய வேறு நல்ல சான்றுகள் கிடைத்தால் ஒழிய, உள்ள சான்றுகள், காலத்தால் பிற்பட்டவை ; தெளிவில் லாதவை என்று கூறித் தள்ளிவிடுவது ஆராய்ச்சிநெறி யாகாது.

இதுகாறும் கூறியவாற்ருன், கரிகாலன் காவிரிக்குக் காைகட்டிய வரலாறு நம்பத்தக்கதல்ல என்பதற்குப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் காட்டிய காரணங்கள் போதியனவுமல்ல ; பொருத்தமாவனவுமல்ல என்பது விளக்கப்பட்டது.

பழந்தமிழ்ப் பாக்களின் இயல்பு, கரிகாலன் காவிரிக் குக் கரை அமைத்த நிகழ்ச்சியைக் கூறும் கல்வெட்டுக்கள், பிறநாட்டு வரலாற்றுக் குறிப்புக்கள், பிற்கால இலக்கியங் கள், ஆசிரியர் பெயர் அறியப்பெருத பிறபாக்கள், கரி காலன் காலம் ஆக இவற்றைத் துணைகொண்டு, காவிரிக் குக் கரைகட்டிய நிகழ்ச்சியின் உண்மை இன்மைகளை முடிவுசெய்யும் பொறுப்பை அறிஞர்களே மேற்கொள்

வார்களாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/105&oldid=578879" இலிருந்து மீள்விக்கப்பட்டது