பக்கம்:திருமாவளவன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. புலவர் வரலாறு

கரிகாற் பெருவளத்தான் காலம், தமிழகம் புலவர் பலர் வாழ்ந்து, புகழ்பெற்று விளங்கிய காலமாகும். நாட்டின் தகுதி, அங்காடு பெற்றிருக்கும் இலக்கிய வளத் தாலேயே எண்ணப்படும். பண்டைத் தமிழ்நாடு இலக்கிய வளத்தில் இணையற்று விளங்கிற்று. புலவர்கள், பொருள் வளத்தைக் கருதாது பொன்ருத கலைவளத்தை வளர்ப் பதில் தம் கருத்தைச் செலுத்தினர். அதன் பயனே, எட்டுத்தொகையும், பத்துப் பாட்டும், பதினெண் கீழ்க் கணக்கும், பிறவும். ஆனல், இப்பெறலரும் கருவூலத்தைப் பேணித்தந்த அப்புலவர்கள் வரலாறுமட்டும் நம்மால் - அவர்கள் இயற்றிய இலக்கிய ஈயத்தை உணர்த்து உணர்ந்து மகிழும் நம்மால் - அறிய முடியவில்லை. அவர் களும், இலக்கிய வளர்ச்சியிலேயே கருத்துடையராய் கின்றுவிட்டனரே ஒழிய, தங்கள் வரலாற்றைத் தங்கள் வாயிலாகவே அளிக்கத் தவறிவிட்டனர். அதுமட்டு மன்று ; அவர்கள் தங்களைப் புரந்த புரவலர்களைப், பேர் அரசர்களே, குறுகில மன்னர்களைக், கொடைவள்ளல்களைப் பாடி, அவர்களே நமக்கு அறிமுகம் ஆக்கினர்களே ஒழிய, தங்கள் காலத்தில், தம்மோடு வாழ்ந்த தம்மையொத்த புலவர்களே மைக்கு அறிமுகமாக்கத் தவறிவிட்டனர். இதனுல் புலவர்களுடைய வரலாறு, நம்மால் அறிய இய லாமற் போனதோடு, அவர்களில் பலருடைய இயற்பெயர் தாமும் அறிய இயலாதுபோயிற்று.

இலக்கியப் பெருவளத்தை நமக்கு அளித்த இப் பெரும் புலவர்களின் வரலாற்றை அறியமறந்த நன்றி கெட்ட தமிழர்கள் இடையே, நன்றிமறவாத் தமிழர் சிலர் இருந்தேவந்தனர். அவர்கள், அப்புலவர்களின் வர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/106&oldid=578880" இலிருந்து மீள்விக்கப்பட்டது